இசையும்,கவிதையும் வியாபாரம் ஆகுது

தான் எழுதிய பாடலுக்கு
தானே இசை அமைத்து
தானே பாடிவந்தார்
இசைக்கு மூவர் என்றிருந்த
தியாகராஜ,சாம சாஸ்திரி,
முத்துஸ்வாமி தீக்ஷிதர்
இவர் பின்னே வந்த
மஹாகவி பாரதியும்
தான் வடித்த கவிதைகளுக்கு
தானே இசை அமைத்து
பாடி வந்தார்
இவர்கள் இருந்தபோதும்
தங்கள் பாடலை,இசையை
வியாபாரம் ஆக்கவில்லை
மறைந்த பின்னர் இவர்கள்
பாடலும் இசையும்
எத்தனை எத்தனை
மனிதரை வாழவைத்து
வியாபார பொருளாயும்
ஆனது ஆனால்
இந்த இசை ஞானியர்கள்
வாழ்ந்தபோது இசையை
தெய்வமாய் மட்டும்
போற்றி வந்தனர்
அதை மறந்தும்
வியாபாரம் செய்யவில்லையே
தங்கள் பாடல்களை
இசையை, கவிதைகளை
மக்களுக்கே அர்ப்பணித்து
பெரும் பொக்கிஷமாய்
விட்டு சென்றனர்

இன்று நாட்டில்
யாரோ எழுதிய
பாடலுக்கு யாரோ
இசை அமைத்து
யாரோ பாடினாலும்
பாடல்,இசை,பாடகர்
அத்தனை பேருக்கும்
வியாபார பங்கு உண்டு
இசை, கவிதை
விற்பனைக்கு....!!!!!!!!!!!!!

எத்தனைகோடி பணம் தரினும்
என் கவிதைகள் உனக்கு
தந்து உன்னை போற்றி
புகழ மாட்டேன் என்று
முடி மன்னரிடமும்
துணிந்து பேசி
வாழ்ந்தனர் அக்கால
புலவர் பெருமக்கள்

அக்காலம் எங்கே
இக்காலம் எங்கே

இன்று இங்கு
வாழ்க்கையே வியாபாரம்
எல்லாம் விலைபோகுது
என்ன செய்ய !ஒன்றும் புரியவில்லை
அன்றுபோல் ஞானியர்கள்
இன்று இல்லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Mar-17, 10:39 pm)
பார்வை : 55

மேலே