பரணன் --மழை

தமிழ்க் கடலில் முகந்தெடுத்துக் கவிஞர் பரணன் என்னும் கருமேகம் பொழிந்த கவிதை ‘மழை’யைக் கண்ணுற்றேன். மழையில் நனைந்தேன் மகிழ்ச்சி கொண்டேன். இம் மழை நீர் இளஞ்சிறார்களின் உள்ளமாகிய வயலிற் பாய்ந்தோடி அறிவுப்பயிரை வளர்க்கின்றது. அறநெறியாகிய பயனை நல்குகின்றது.இம் மழை நீரின் இயல்பை இங்கே சிறிது காண்போம்.





முதலிலுள்ள ‘தமிழ்’ மொழியுணர்வைத் தூண்டும், அடுத்து வரும் ‘சிங்கைத்தாய்’ ‘சிங்கப்பூர் , நாட்டுக்கொடி , என்பன நாட்டுப்பற்றை அளிக்கும்.





அடுக்குவீடு , அறை,வானொலி , தொலைபேசி, விளக்கு,கடிகாரம், நாள்காட்டி என்பன வீட்டுப்பெருமை தெரிந்து உரைப்பது கவிதை’’. இதுதான் கவிமணி தேசிகவிநாயகர் காட்டும் கவிதை இலக்கணம் . உணர்ச்சி, கற்பனை, வடிவம் உணர்த்தும் உண்மை என்னும் நான்கும் கவிதைக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் கவின்மிகு தூண்கள். உள்ளத்தை இன்புறுத்துவதும் பண்படுத்துவதும் விளம்பும்.





‘குழந்தை,அம்மா, கைவீசல், கைதட்டல்,நல்ல தம்பி, கோமாளி என்பன குடும்பப் பாசம் கொடுக்கும்.





‘ஆசிரியர்,எண்கள், சீருடை, எழுதுகோல்,புத்தகம் என்பன பள்ளிக் கல்வி பயிற்றும்.





‘வானம்,சூரியன், கடல், காடு,கதிர், காலை பூக்கள், ஆலமரம், மாம்பழம், ஆகியவை இயற்கை இன்பத்தில் ஆழ்த்தும்.





‘சிட்டுக்குருவி , சின்னக்குருவி ,கோழி, பசு, எனது நாய் ஆகியவை உயிர்களிடத்தில்அன்பு செய்ய உரைக்கும்.‘கப்பல்,படகு, மிதிவண்டி , போக்குவரத்துப் பாதைக் காட்டும்.





‘தமிழவேள்,வள்ளுவன், லிங்கன் என்பன சான்றோர் பெருமை சாற்றும்.





பூ, ஆத்திசூடி, வேலி. வெற்றிக் கோப்பைகள், வாழும் நெறி, வழி, ‘பணிவன்பு,மறவாதே , நிமிர்ந்த நன்னடை, நம்பிக்கை , பொய் சொல்லாதே , எண்ணம்,பாடம் தம்பிக்கு, என்பன அறநெறி போதிக்கும்.





பள்ளி இருபத்தைந்து’ பண்பாட்டு நெறியினைப் பழந்தமிழ்க் குறள் வழியிற் பகரும்.





இறுதியிலுள்ளது இவையனைத்தையும் , ‘எண்ணிச் செயல்படுக’ என வலியுறுத்தும்.பேசும் மொழி, வாழும் நாடு, வசிக்கும் வீடு, இருக்கும் குடும்பம்,படிக்கும் பள்ளி, பார்க்கும் இயற்கை, பழகும் பறவை , விலங்குகள், செல்லும் ஊர்திகள்-இப்படி இளங்குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த பொருள்களைக் கருவாகக் கொண்டு கவிதை யாத்துள்ளார் கவிஞர் பரணன், இவற்றைப் பாடி இன்புறும் குழந்தை எதிர்காலத்தில் வள்ளுவர்போல் இலிங்கன்போல் வரவேண்டும் என்று கருதி இவர் அறநெறிகளையும் அரிய பண்பாட்டு வழிகளையும் கூறிச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறார்.





கவிஞர் பரணன் ‘காட்டுக்கு வேலி மரமாகும். கவிதைக்கு வேலி மரபாகும்’’ என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர். சிங்கப்பூரில் செந்தமிழ்ப் பற்றுடன் சிறந்த கவிதைகளை யாக்கும் இயல்பினர்.இவரது பாடல்களைச் சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் செவியுற்றிருக்கிறேன். ‘தமிழ்முரசு’இதழில் படித்து இன்புற்றிருக்கிறேன். இவரது கவிதைகளில் கவிதைக்குரிய உணர்ச்சி , கற்பனை , வடிவம், உவமை நலன் சொல்லாட்சி முதலிய கூறுகள் களிநடம்புரியக் காணலாம்.





‘அன்பின் உருவே சிறுகுழந்தை , அழகின் நிழலே சிறு குழந்தை, இன்பக் கலையே சிறு குழந்தை, இனிப்பின் வடிவே சிறுகுழந்தை ’ இது குழந்தைக்குக் கவிஞர் செப்பும் இலக்கணம்,உணர்ச்சியின் வேகத்திற்கு இவ்வரிகள் சான்றாக உள்ளன. ‘‘மதலை வாய்மொழி தேனாகும்,மாதுளை வண்ணம் இதழாகும். புதுமைத் தென்றல் உடலாகும். பூவும் விழியும் உறவாகும், இப்பகுதி கவிஞரின் உவமை நலத்துக்குக் எடுத்துக்காட்டாகும்‘‘வையம் என்னும் வீடிதற்குக் கூரையானது,வாழுகின்ற யாவருக்கும் சொந்தமானது ’’ வானம் –நல்ல கற்பனை . ‘‘சின்னஞ் சிறிய சிட்டு, சிறகு சீனப்பட்டு, ‘‘அலைகள் என்னும் தொட்டிலில் ஆடுதடா படகு, தண்ணீர்க்கலைகள் என்னும் கட்டிலில் காட்டுதடா உலகு’’சிறந்த சொல்லாட்சி.





‘‘அன்னை சொல்லும் அன்புமொழி, அப்பா கூறும் அறிவு மொழி, அண்ணன் பேசும் அழகு மொழி, அதுதான் எங்கள் தமிழ்மொழி’’என்னும் வரிகள் சிங்கப்பூர்த் தமிழ்க் குடும்பங்களில் என்றும் பேசும் மொழி இன்றமிழாக இருத்தல் வேண்டும். என்னும் கருத்தைச் சொல்லாமற் சொல்கின்றன. அன்பும் அறிவும் அழகும் தமிழ்மொழியின் அரிய பண்புகள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றன.‘மழை’ என்னும் இந்நூலில் உள்ள பாடல்களைப் படித்துப் பைந்தமிழ்ச் சிறார்கள் பயன்பெறுவார்கள் என நம்புகிறேன். கவிஞர் பரணனின் கவிதைத் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : (23-Mar-17, 4:26 am)
பார்வை : 151

மேலே