தொலையுமா மோதல் தொடருமா காதல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
135ம் படைப்பு.....

தொலையுமா மோதல்.....!
தொடருமா காதல்......!


சுடும் நிலவே!
என்னை ரசிப்பாயா....!
(கவிதை)

முள்ளின் மலரே!
கொஞ்சம் சிரிப்பாயா.....!

என்னை கொஞ்சம்
நீயும் மன்னிப்பாயா.....!

எந்தன் நட்பை
நீயும் ஏற்பாயா.....?

(2)



தவிக்கிறேன்!
நான் தவிக்கிறென்!
உன் கோபத்தை எண்ணி நான் தவிக்கிறேன்....!

துடிக்கிறேன்!
நான் துடிக்கிறேன்!
எரியும் நெருப்பினில் விழுந்து நான் துடிக்கிறேன்....!

அடி! நான்...... மனம்விட்டு பேச நினைக்கிறேன்......!

yen!கவிதைய தூத அனுப்புறேன்....!

என் தோழியாக உன்னை அழைக்கிறேன்.....!

ஒரு விண்ணப்பம் தானே கொடுக்கிறேன்.....!



அடி! உன் மனசாட்சிய எடுத்து வச்சி.....
வா! சிறகடிக்கலாம்.....
இனி நாம் நட்பின் கட்சி......!


நான் கனவு காண்பது
ஒரு கானல் காட்சி.....!

நம்மை அடிமை படுத்தி ஆட்சி செய்ய....
அன்பே! இனி வேண்டும்....
ஒரு நட்பின் ஆட்சி....!


( உந்தன் பெயரை நான் கேட்க...!

என்னை கொஞ்சம் நீயும் ஏச.....!

மோதல் இடையே முட்டிக் கொள்ள.....!

விதியின் மடியில் இருவரும் மாட்டிக்கொண்டோம்......!

நட்பாக மாறி இனி தப்பிக்கொள்வோம்.......! )


(சுடும் நிலவே)


உன் பேர கேட்ட மொறைக்கிற......!
இந்த அப்பாவி மனச பொசுக்கிற.....!
வீனா வம்புக்கு இழுக்கிற.....!
ஒரு வீராப்பு காட்டி எரிக்கிற.....!


அடி! என் மனம் இன்று தாங்காது...!
உன்னால் விழிகள் இனி தூங்காது.....!
உன் நட்பை எண்ணி ஓயாது...!
என் தலை என்றும் சாயாது.....!


அடி! உள்ளே இருப்பது வெள்ள மனசு.....!
அதை எட்டி முறைப்பது உந்தன் மனசு.....!
கோபம் கொள்வது ஒரு பெண்ணின் மனசு.....!
அதை மாற்ற நினைப்பது இந்த ஆணின் மனசு.....!


அடி! விட்டுக்கொடுப்பது ஆணின் இதயம்....!
என் கவிதைக்கு இன்று உன்னால் உதயம்.....!
உந்தன் மனதில் ஒரு நாள் நட்பு விடியும்.....!
அன்று புரியும்....!
நம் மோதல் முடியும்....!

( விதி செய்த சதியில்
நான் மாட்டிக்கொண்டேன்......!
காலம் செய்த தவறால்
நான் சிக்கிக்கொண்டேன்......!
ஒரு கவிதை எழுதி
நானும் தப்பிக்கொண்டேன்......!
நட்பின் மேலே...!
என்றும்! நான் காதல் கொண்டேன்......!
காதல்கொண்டேன்......!!
காதல்கொண்டேன்........!!!


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (23-Mar-17, 7:57 am)
பார்வை : 194

மேலே