எழிலே இயற்கையே

மயிலுக்கழகு கருமேகம் கண்டு
தோகை விரித்தது ஆடும் போது

கூவும் குயிலுக்கழகு அதன்
தேன்சிந்தும் குரல் என்றால்
கடலுக்கு அழகு ஓயாது
நடனமாடும் அதன் அலைகள்
நதிக்கழகு அதன் ஒய்யார ஓட்டம்
நீர் அருவிக்கழகு அதன்
ஓங்கிவரும் வீழ்ச்சி, நீர்வீழ்ச்சி
கன்னத்தில் மச்சம்
கன்னிக்கழகு எனில்
வெண்ணிலவுக்கழகு அது
தாங்கிவரும் மாசு இன்னும்
பௌர்ணமியில் அது தரும்
பால்போன்ற குளிர் வீசு
பரிதியே உன்னழகு
அதி காலையில் நீ தரும்
இளங்காலை உதயம் ,சூரியோதயம்
காற்றிற்கு அழகு தென்றலாய்
வந்து அது காதலரைத்தீண்டும் போது
வானத்திற்கழகு அதன் நீல நிறம்
இன்னும் அதில் எழிலாய் சிமிட்டிடும்
இரவுதாரகைகள்
இப்படி எண்ணிக்கொண்டே போகலாம்
இயற்கையே உன் அளவிலா எழிலை

இவற்றையெல்லாம் பார்த்து ரசித்திட
இரண்டு கண்கள் தந்தாயே ஆண்டவா
உனக்கு எந்தன் கோடான கோடி வணக்கங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Mar-17, 1:35 pm)
பார்வை : 157

மேலே