வானமே வேண்டும்

ஆகாயம்
வீடமைப்பேன்
முகிலினால்
ஓடமைப்பேன்
முகில்வீட்டில்
குழியமைத்து
மழைநீரால்
அதைநிறைப்பேன்
தண்ணீரில்
தலைநனைத்து
விண்மீனில்
குளிர்காய்வேன்
மேகத்தால்
உடை அணிந்து
தென்றலினால்
தலை சீவி
வெண்ணிலாவில்
முகம்பார்ப்பேன்
பகலவனில்
கறிசமைத்து
பறவை உடன்
அதையுண்பேன்
வானமெங்கும்
போய்வருவேன்
பட்ச்சிகளைத்
துணைக்கழைப்பேன்
சந்தோஷச் சாகரத்தில்
முத்தெடுப்பேன்
முகிழ்த்தெழுவேன்
கவலையில்லா
வாழ்வொன்றைக்
காணவேண்டும்
ஆதலினால்
விண்வீடே நீவேண்டும்
மண்வீடே நீவேண்டாம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (23-Mar-17, 4:34 pm)
பார்வை : 60

மேலே