ஆளப்பிறந்தவர்கள் நாமுந்தான்

காண்கின்ற இடமெல்லாம்
கதிராகித் தெரிகிறதே !
மாண்புடைய வேளாண்மை
மங்காது செழிக்கிறதே !!


ஆண்டவனால் அளித்திட்ட
அருங்கொடையாம் விவசாயம் !
வேண்டுவோம் எந்நாளும்
வேகமுறப் பல்கிடவே !!


தீண்டுகின்ற செந்நெல்லும்
திக்கெட்டும் சாற்றிடுமே .
யாண்டுமே உழைப்பன்றோ
யாங்கணுமே வேண்டுமென்றே !!


பாண்டவரின் பசுமையினைப்
பண்புடனே பாரதத்தில்
காண்கின்றோம் ஈங்கின்றே !
காட்சியிலே இயற்கையினை !!


மாண்பின் செந்தமிழர்
மலைமலையாய்க் குவித்திட்ட
ஆண்மையும் இதுவன்றோ
ஆளப்பிறந்தவர்கள் நாமுந்தான் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Mar-17, 5:10 pm)
பார்வை : 60

மேலே