அப்பா

நான் ரசித்த
முதல் ஹீரோ
அப்பா
நான் பார்த்த
முதல் தியாகி
அப்பா
நான் நேசித்த
முதல் ஆண்
அப்பா
நான் பழகிய
முதல் நண்பன்
அப்பா
நான் கண்டறிந்த
முதல் கூகுள்
அப்பா
நான் படித்த
முதல் புத்தகம்
அப்பா
நான் வணங்கிய
முதல் தெய்வம்
அப்பா
நான் வளர
முதலீடு இட்டது
அப்பா
என் மகன்
வடிவில் மீண்டும்
பார்க்கிறேன் அப்பா!

எழுதியவர் : லட்சுமி (23-Mar-17, 10:38 pm)
Tanglish : appa
பார்வை : 819

மேலே