தமிழ் மாமன்

தென்றல் வீசி வர
-------------------ஒரு சிறு தோட்டம் வேண்டும் அங்கே
-------------------சின்னக் குயில்கள் கூவிட வேண்டும்
தெம்மாங்கு பாடி வர
---------------------தென்னம் பூம்பாளை சிரிப்பினில் அங்கே
---------------------ஒரு தென்பாண்டி சோடி வேண்டும்
கன்னக் கதுப்பு மின்ன
----------------------அவள் ஆனந்தமாய் சிரிக்கையிலே
----------------------என் மனதில் குற்றால அருவி கொட்டிட வேண்டும்
பாட்டெழுதிட எனக்கு
----------------------ஒரு மடிக் கணினி வேண்டும்
----------------------பக்கத்தினில் அவள் நின்றிட வேண்டும்
ஒன்னுமே புரியலையே மாமா என்கையிலே
--------------------பாட்டெதற்கு புரியணும்டி கைநாட்டுக் காரி உனக்கு
--------------------காதல் பள்ளி டீச்சரே நீதானடி என்று நான் சொல்லையிலே
--------------------கட்டி அணைத்து ஆயிரம் முத்தங்கள் அவள் பொழிந்திட வேண்டும் !

--------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-17, 9:34 am)
Tanglish : thamizh maaman
பார்வை : 114

மேலே