சில்லுக் கருப்பட்டிச் சிரிப்பு

சின்ன ஓலைப் பெட்டியில்
சில்லுக் கருப்பட்டி குலுங்குவது போல்
நீ சிரிக்கையிலே
பனை ஓலையில் இளங் காலையில்
பதநீ குடிச்சது போல் குளிருதடி
எம்மனசு !
கன்னங் கருத்த கார் முகிலி
சித்தச் செவந்த இந்த மாமன் மேல் வச்ச ஆசையை
நீ மறந்துவிடாதே !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-17, 10:23 am)
பார்வை : 62

மேலே