காச நோயை ஒழித்திடுவோம்்

மைக்கோ பாக்டீரியா நுண்கோல் உயிரி
மாந்தருக்கு தந்திடும் வியாதி டிபி
மனித சுவாச மண்டலம் தாக்கி
உடலெங்கும் பரவி தந்திடும் பீதி

காய்ச்சல் தும்மல் பசியின்மை
அடிக்கடி அயர்வு இரவில் வியர்வை
அடையாளம் காட்டும் காச நோயை
ஆரம்ப சிகிச்சை தடுத்திடும் சாவை

காற்றில் பரவும் தொற்று வியாதி
இருமலுடன் குருதி இதன்முதல் அறிகுறி
உமிழ்நீர் சீழை உடன் பரிசோதித்தல்
உறுதி செய்திடும் நோயின் வருட்டல்

பிறந்த நான்குதினத்துள் போடும் BCG
குழந்தைக்கு தந்திடும் நோய் காப்பு
ஆறுமாதம் வியாதிக்கு தொடர் சிகிச்சை
ஆரோக்கிய வாழ்வுடன் ஆயுள் மீட்பு

நோய் கண்டவருடன் நெருங்கிய தொடர்பு
சிலநாட்களில் புகுத்திடும் நோயின் தொற்று
உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கு
காசநோய் தாக்கம் உண்டெனக் கணிப்பு

தூயநீர் காற்று சத்தான உணவு
முறையான தடுப்பூசி நிறையான தவிர்ப்பு
எலும்புருக்கி எனும் காசநோய் ஒழிப்பு
கணிசமாய் குறைத்திடும் மானிட இறப்பு

சுவர் இருந்தால்தான் சித்திர வரைவு
சுகம் இருந்தால்தான் இத்திரை நமக்கு
சுகாதார சூழலை பேணி காத்திடுவோம்
சவ காசநோயை வேரோடு அழித்திடுவோம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (24-Mar-17, 10:46 am)
பார்வை : 42

மேலே