ஞாயிறு - துயில் களைந்தும் எழ மனமில்லை

ஞாயிறு - துயில் களைந்தும் எழ மனமில்லை :

வாரத்தின் முதல் நாள் என்று அவசரம் ஒருபக்கம்,
என்றும்போல இல்லாமல் இன்றாவது விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மறுபக்கம்.
சூரியன் வந்து குறுக்கில் மிதித்து எழுப்பாத குறை,
சூழீரென்று முதுகில் உரைத்த சூடு
பட்டென எழுப்பி விட்டது.
முதல் நாளே அருமையிலும் அருமை
என்றும் இல்லாமல் இன்று ஐந்து நாழிகை கூடுதல் தாமதம்.
ஒவ்வொரு நாளும் போர்களம் போல
வேலையின் தீவிரமோ அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரம் போல
எடுக்கவும் முடியவில்லை, பிடிக்கவும் முடியவில்லை.
வண்டி வண்டியாய் வசை வாங்கி பள்ளிக்கு போனபோதே ஒழுங்காய் படித்திருக்கலாம்.
போனதை எண்ணி புழுங்குவதை விட
இனி வரும் நாட்களை சரி செய்ய வேண்டுமே...
இதோ சனிக்கிழமை வார இறுதி
கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்தில் மாட்டி வெளிவந்த சக்கை போல
ஓயாமல் ஓடி அலைந்து இன்று துவண்டு வந்து விழுந்தேன் வீட்டு வாசலில்.
இதோ வருகிறது ஞாயிறு,
வாரமுழுக்க போட்டுவைத்த ஆசைப் பட்டியல்
ஒவ்வொன்றாக இன்று நிறைவேற்றி கொள்ளலாம்.
இருப்பினும் இன்று ஆசைக்கும் விடுமுறை விட்டுவிட்டேன் போல,
ஆகையால் தான் துயில் களைந்தும் எழ மனமில்லை.....


நன்றி,
தமிழ் ப்ரியா...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (24-Mar-17, 11:24 am)
பார்வை : 176

மேலே