என்னவள்

எண்ணம் சிதைத்தாள்
நெஞ்சம் அமர்ந்தாள்
அவள் அணிந்தால்
அது ஆடை
மணந்தேன்
முல்லை வாடை
பளிங்கால் மின்னுது
அவள் தாடை
செந்நிற அதரம்
மலர்த் தோடை
நகர்ந்தாள்
அவள் மலர்க் கூடை
கண்களால் தந்தாள்
அன்புச் சாடை
அருகே சென்றேன்
நாணினாள் வெட்கினாள்
கண்டு கொண்டேன்
குணத்தால் அவள் சிறுகாடை
வனத்தைச் சிறைப்
பிடித்ததோர் சடை
அளகின் மடை
முல்லையை மிகைத்தது
இவள் இடை
நான் கோடையில்
நனையும் நீரோடை
என்னில் இருப்பாள்
என்றும் இருப்பாள்
நிலம் துயிலும் வரை
எனது பாடை

ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (24-Mar-17, 1:20 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ennaval
பார்வை : 126

மேலே