சென்னை

எட்டு மணி நேரம்
அலுவலக வேலையில்...
நான்கு மணி நேரம்
சென்னைச் சாலையில்...

நித்தம் நித்தம்
எத்தனையோ லட்சம்
மனித மணி நேரங்கள்...
வீணிலும் வீணாய்...

போக்குவரத்தைக் குறைக்க
ஆக்கப்பூர்வ வழிகள்
எதுவுமே இல்லையா..
தொழிற்சாலைகள்
பலவற்றை இடம்
மாற்றவும்.. தமிழ்நாட்டை
வளமாக்கவும்
வழிகள் காண்போம்
விழிகளின் வலி தீர்க்கும்
வேகத்தில்...

இன்றில்லா விட்டாலும்
என்றாவது ஒருநாள்
அரசாங்கம் இதைச் செய்திட
ஆர்வம் உள்ளோரே
அனுபவம் உள்ளோரே
ஆன்றோர் சான்றோரே
அன்பு நண்பர்களே
ஆலோசனைகள்
வழங்குவீர்களாக...
👍🙋🏻‍♂🙏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (24-Mar-17, 1:26 pm)
Tanglish : chennai
பார்வை : 59

மேலே