உயிர் காப்பான் தோழன்

உயிர் காப்பான் தோழன்!
காதலில் தோல்வி? தற்கொலை!
தேர்வில் தோல்வி? தற்கொலை!
பெற்றோர் திட்டிவிட்டார்களா? தற்கொலை!
இவை நாம் கேட்ட செய்திகள்!
நாம் கேட்க்காத செய்திகள் ...
எத்தனை தற்கொலைகள் நட்பால் தடுக்கப் பட்டுள்ளன?
எத்தனை பேர் நண்பர்களால் காப்பாற்றப் பட்டுள்ளனர்?
என்பது!
அந்த நட்பிடம் கேளுங்கள், சொல்லமறுக்கும்,
தன் நண்பனைக் கோழை என்று காட்டிக்கொடுக்க மனமின்றி!
உயிர் காப்பான் தோழன், மானத்தையும் சேர்த்து!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 6:32 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 314

மேலே