கோபத் தீ

தியானம் செய்தேன், தியானம் செய்தால் உன்னுள் ஒரு தீ உருவாகுமென்ற கூற்றை நம்பி...

என்னுள் உருவாகியது அடங்காத கோபம்....
அக்கோபத்தின் காரணங்களை ஆராயும் போது கிடைத்தன,
நீண்ட கால தேங்கிய நினைவுகள், நிராகரிக்கப்பட்ட உண்மைகள், சோடிக்கப்பட்ட பொய்கள் என பல பதில்கள்....

ஏமாளிகளாய் ஏமாந்து கொண்டே செல்வதால் தானே, தமிழ்நாட்டில் வெறுத்து ஒதுக்கப்படுகிறாள்,
உலகப் பொதுமறையாய் திருக்குறளை வழங்கிய பேசுவதற்கினிய எனதன்பு தமிழ்த்தாய்....

பல வாய்சொல் வீரர்கள் பெயருக்காகவும், பெருமைக்காகவும் தமிழர், தமிழினம் என்றெல்லாம் வாயளந்துவிட்டு,
இரட்டை வேடமிடுகிறார்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவைத்து...

கோபத்தில் ஏதோ கிருக்குகிறேன் அழகிய தமிழால்....

தமிழில் பேசினால் திறமை இல்லையென்று வெளியே அனுப்பும் துரோகிகளின் கழுத்தை அறுத்து கயமை போக்க,
ஒரு கனநொடி போதும்....

உயிர்நேயத்தோடு உயிர் குடிக்கத் துணியாது, கயமை நயமிக்க வெள்ளை ஆடைக் கயவர்களை பேச்சை மதித்து, மக்களாட்சி நடப்பதாக நம்பி அரசாங்கத்திற்கும், சட்டத்திற்கும் இடமளிக்கிறோம் அல்லவா?!....
அதனால் தானே இந்த ஆட்டம்!....

ஆடாத ஆட்டமிட்ட கூட்டமெல்லாம் காணாமல் போகும் காலம் வெகுதூரமில்லை.....
நல்ல காதல்களை அழித்து, பல காதலர்களைப் பிணங்களாக்கிய சாதி, மதங்களின் ஆளுமை இன்னும் ஓய்ந்தபாடில்லை....

கைகளிலே ஆயுதம் ஏந்தி,
நெஞ்சினிலே புரட்சி குடியேற,
மண்ணிலே இரத்தம் சிந்த,
நாட்டின் முன்னேற்றம் தடுக்கும், உலகின் அமைதி, ஒற்றுமையைக் கெடுக்கும் களைகளாக இருக்கும் தலைகளையெல்லாம் அறுத்து எறியும் காலம்
யாவரும் காண்பீர்கள்,
சிவமென்னும் ஜீவனாய் விளங்கும் அன்பின் கோர ருத்ரதாண்டவம்......

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Mar-17, 8:50 pm)
பார்வை : 1132

மேலே