வானமே எல்லை

வழியெங்கும் எத்தனை எத்தனை
இன்னல்கள் கேலிகள் பேச்சுக்கள்
அத்தனையும் தாண்டிவிட்டோம்...

தெருவெங்கும் குப்பை
துப்புரவு தொழிலையும்
தூசியாக ஊதி ஊரை
சுத்தப்படுத்திவிட்டோம்.

வாசல் தாண்டிவிட்டோம்
வழி எங்கும் முட்கள்
காலில் மட்டுமே தைத்ததால்
எடுத்து வீசிவிட்டோம்...

வானமே எல்லையென்று
வானுக்கு சுற்றுலா செல்லவும்
கிளம்பி விட்டோம்.

நெஞ்சம் நிமிர்த்தி
வீர நடை போட பயமே
எங்கு எப்படி எந்த ரூபத்தில்
கயவனை காண்போமோ என்று
வானமும் எல்லையற்று போகிறது
வாழும் பூமியில்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (25-Mar-17, 8:39 am)
Tanglish : vaaname ellai
பார்வை : 270

மேலே