எங்கே இருக்கிறாய் எப்படி இருக்கிறாய்

எங்கே இருக்கிறாய் ! எப்படி இருக்கிறாய் !
அலைபேசி உரையாடல் ,
அன்பின் வார்த்தைகள்
விழி பேசிய மௌன மொழிகள்,
இதழ் பேசிய இனிய மொழிகள்
விரல் தீண்டிய ஸ்பரிசங்கள் ,
விடியலின் முதல் உன் பார்வைகள்
எல்லாம் தொலைந்தது ! நீயும் தொலைந்து விட்டாய் !
எங்கே இருக்கிறாய் ! எப்படி இருக்கிறாய் !

நான் வாழ்வது இனிதாக இல்லை
நான் சாவதும் எளிதானது இல்லை
உன்னை மறப்பதும் எளிது இல்லை

காதல் தந்த பிரிவின் வலி எவ்வளவு கொடிது
காதலி உன்னை இன்றுவரை காணாதது அதைவிட கொடிது
காத்திருப்பது சுகம் தான் நீ வருவாய் எனில் -ஆனால் வரமாட்டாய் !
காலமும் சென்று கொண்டு இருக்கிறது -உன்
காதல் என்னை கொன்று கொண்டிருக்கிறது
எங்கே இருக்கிறாய் ! எப்படி இருக்கிறாய் !

கவிதைகள் பல படைத்துக்கொண்டு இருக்கிறேன் -உன்
கண்கள் அதை பார்த்து இருக்குமா !இதயம் படித்து இருக்குமா -உனக்கு மட்டும் என்
கவிதை யாவும் கானல் நீர்தான் !
கவிதையை அனாதையாக்கி !என்னை தனிமையாக்கி சென்றவளே
எங்கே இருக்கிறாய் ! எப்படி இருக்கிறாய் !

என் இறப்பின் செய்தி கேட்டு என்றேனும் -உடல்
இடுகாடு செல்லுமுன் வந்திடு -இன்னும் நான் எழுத போகும்
கவிதையாவும் எப்படியாவது படித்திடு
நம் கவிதை குழந்தைகளை பத்திரமாய் காத்திடு !
எங்கே இருக்கிறாய் ! எப்படி இருக்கிறாய் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (25-Mar-17, 12:31 pm)
பார்வை : 269

மேலே