படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகளை
மலர்வித்தது
நன்றி !

முன்னோரு காலத்தில்
குளித்தோம்
இப்படி !

அன்று முடிந்தது
இன்று முடியாதது
வற்றியது தண்ணீர் !

அந்நியர்களின் சுரண்டலால்
பறிபோனது
நிலத்தடி நீர் !


சுகமான குளியல்
இனி சாத்தியமில்லை
காலம் மலையேறிவிட்டது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (25-Mar-17, 1:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 86

மேலே