காற்றே பூங் காற்றே

நீ நகர்ந்தால்
எமக்கு ஜீவாதாரம்
நீ படர்ந்தால்
அது மூலாதாரம்
உன் சேவை
வாழையடி வாழை
நீ இல்லை என்றால்
நாம் வெறும் பேழை

எமக்கு நிதமும்
நீ ஆசி தருகிறாய்
எம் நாசி வழியில்
நீ தொடரும் பயணங்களால்...

கட்டணம் அறவிடாத கரசேவகன் நீ
உன் கண முடக்கம்
அதில் எம் ஜீவிதமே அடக்கம்

உன் மனம்
கடல் போன்றது
அதனால்தானோ நீ
எங்கும் வியாபித்து இருக்கிறாய்

கோடை நாக்கின் கொள்ளி உரசலில்
அக்கினி ராட்சகன்
ஆக்ரோஷம் நடத்தும் வேளை
இறுக்க அனைத்து இன்பம் தருகிறாய்
குளிர்மை ரசத்தை எங்கும் பிழிகிறாய்

சில வேளை
உன் குறும்புகள்
கடிக்கும் கரும்புகள்
தையல் பெண்ணிடம்
நாம் மையல் கொள்ளும்
ஆவலை எம்மில் தீண்டுகிறாய்
இடை நுழைந்து அவள்
உடை நீக்கம் செய்வதால்

புல்லாங்குழலும்
உன் கால் பிடிக்கும்
ஓசை வரம் கேட்டு

பூக்களை களவாய்
உரசும் கள்வனே !
அருவியும் நாணலும்
கலவி செய்வதை
இடையில் புகுந்து
ஏன் இன்பம் கெடுக்கிறாய்

பணி செய்து கிடப்பது
உன் கடன் நாமறிவோம்
எவ்வாறு செய்வது
உனக்கு நன்றிக்கடன்
அதை நாமறியோம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (25-Mar-17, 4:37 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaatre poong kaatre
பார்வை : 114

மேலே