விளம்பரம்

விலை கொடுத்து விளம்பரம்
இலவச சேவைக்கு

அத்தியாவசியம் சிலருக்கு
விளம்பரம்

அடையாளம் இவர்களுக்கு
விளம்பரம்

தேவைகள் அங்கீகாரம் எல்லாம் இங்கே
உதை பந்தாட்ட பந்துகள்

இந்த விளம்பர ஆட்டத்தில்
எப்பொழுதும் தாயம் சாமானியன்
அவனுக்கோ வறட்சி
இவன் கையிலோ புரட்சி
ஆமாம் விளம்பர புரட்சி

பாவம் கல்வி வள்ளல்கள்
காவி வள்ளல்கள்
வெள்ளை வேட்டிகள்
இன்னும் நன்றாக இருக்கிறான் கோமணத்தோடு விவசாயிகள்
போய் கேளுங்கள் வந்தாரை வாழ வைத்தவன்
வஞ்சித்தவனுக்கும் சோறு போடுவான்

தேவைக்கு விளம்பரம் இல்லை
தேவையில்லாமல் விளம்பரம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Mar-17, 7:32 pm)
Tanglish : vilamparam
பார்வை : 689

மேலே