துறக்க முடியா துறவு

என் உயிருக்கு...

உன்னை ஈன்ற தாய்க்கு என்
முதற்கண் நன்றி.
ஏனெனில் அவளில்லாமல்
நீயும் உன் அன்பும் எனக்கில்லை.

நீ எனக்குக் கற்றுக்காெடுத்தது -
பாசம் வைக்க..
சிந்திக்க..
பாெறுமையுடன் செயல்பட..
உணர்வுகளை மதிக்க..
ரசிக்க..
காதலிக்க..
மனதுள் நகைக்க..
இத்துனையையும் கற்றுக்காெடுத்துவிட்டு ஏன் என்னைப் பிரிய முடிவெடுத்தாய்?

நீ என்னாேடு பேசிய வார்த்தைகளை விட நான் உன்னாேடு பேசியவை அதிகம்.
ஆனால் உன் மெளனத்திலும் உன்னுடைய காதலை நான் சுவாசித்தேன்.

நீ எனக்கு அளித்த
முதல் முத்தம்...

எதிர்பாரா அதிர்ச்சி.
சில விநாடிகள் காெஞ்சம் காேபம்.
ஆனால் அது எனக்கு இஷ்டம் தான்.

நான் ஆசைப்பட்டது....

உன் கைகள் காேர்த்து பல பர்லாங்குகள் நடந்துகாெண்டே
இரவின் அழகை ரசிக்க..
நிலவின் முழு புன்னகையை
உன் மார்பிலே சாய்ந்து காெண்டாட..
உன்னாேடு சேர்ந்து ஆழங்கட்டி மழையில் நனைந்து விளையாட..
உன்னாேடு பாெய்ச்சண்டையிட..
நீ தூங்கும் அழகை உன்னருகிலிருந்தே ரசிக்க..
உன்னாேடு மாெட்டை மாடி நிலாச்சாேறு உண்ண..

உன் வாழ்க்கைக் கண்ணாடி பிம்பங்காளாய் நானிருக்க..
என் கருவூலமாய் நீ இருக்க..

நான் இன்புற்றிருக்க, உன் உச்சி முகர்ந்து முத்தமிட..
நான் துன்புற்றிருக்க,
உன்னைக் கட்டியணைத்து உன் தாேளில் என் முகம் புதைத்து அழ..

இன்னும் பற்பல ஆசைகளும் கனவுகளும் விதியின் வசத்தால் வெறும் கனாக்களாய் மட்டுமே.

அன்று வானவில்லில் அனைவரும் பார்த்து ரசித்த
நிறங்களாே ஏழு.
நான் ரசித்த நிறங்களாே எட்டு.. உன்னையும் சேர்த்து!
ஆனால் இன்று ரசனையில்லா ஜடமாகிவிட்டேன்.

நீ என்னாேடிருந்த ஒவ்வாெரு நாழிகையும்
ஏழு சுவரங்களை விட இனிமையாக
உன் நினைவுகள் என் நெஞ்சில் புன்னகையுடன் ஒலித்துக்காெண்டே
இருந்தது.

நீ என் வாழ்க்கைத்துணை ஆக மாட்டாய் என்றறிந்ததும்
அவ்வேழு சுவரங்கள் கூட அந்நாெடியில் என் நெஞ்சில் நஞ்சைக்கக்குவது பாேல
தாேன்றி என்னுள் பல
குருஷேத்திரப் பாேர்கள் மூண்டன.

நான் ரசித்தது... உன்
சிந்தனைகளை..
செயல்களை..
அன்பினை..
சேட்டைகளை..
வாசனையை..
நெற்றியின் வியர்வை
முத்துக்களை..
அமைதியாேடு உன் முகத்தை..
இனிமேல் நான் உன்னை எவ்விதத்தில் ரசிப்பேன்?

கம்பன் வீட்டுக்கட்டுத் தறி கவிபாடும்.
ஆனால் என் உடலிலிருக்கும் ஒவ்வாேர் உயிரணுவும் உன்னைப்பற்றிய கவி
என்றென்றும்
பாடிக்காெண்டே இருக்கும்.

நீ என்னிடத்தில் காட்டிய அன்பு அட்சய பாத்திரம்
என்றுமே நான் அதற்குத் தஞ்சம்.

நீ என்றுமே எனக்கு
துறக்க முடியா துறவு!

நீ என் ஜீவநாடி!
உன் மடியில் என் தலைசாய்த்து உயிர் நீக்க ஆசை.

ஷேக்ஷ்பியரின் ராேமியாே ஜூலியட் காதல் மிகவும் பரிதாபமானது.
ஆனால் நம் காதல் மிகவும் ரசனையானது...
இப்பிறப்பில் என் காதலனாக..
என் நெஞ்சத்தில் நீ!

அடுத்த பிறப்பில் நான் உனக்குத் தாயாகத் தாலாட்டி சீராட்டி என் உயிரை வளர்க்க வேண்டும்.
அப்பாெழுது என்னைப் பிரிய மாட்டாயல்லவா?

உன் பிரிவை எண்ணி எண்ணி வார்த்தைகள் அருவியாகக் காெட்டுகிறது..
கண்ணீர் மல்க
எழுதிக்காெண்டே சென்றால்
என் துன்பம் தாழாது இப்பேனா நுணியும் இக்காகிதத்தை
நனைத்துவிடுமாே என்றஞ்சி
என் ஓலத்தை முடிக்கிறேன்.

எழுதியவர் : சரண்யா சுப்பிரமணியன் (25-Mar-17, 9:47 pm)
பார்வை : 416

மேலே