மௌனம் காக்கவும்

மௌனம் சலனமில்லா வணக்கம்
உதடு பிரியாது உள்ளம் பேசும்
அழகிய மொழி
மௌனம் அழகுதான்
ஆழ்கடலின் அமைதி
சப்தமில்லா இரவு
அது சரி
மௌனம் சம்மதமா
புதிய சகாப்தமா
அரசியலின் மௌனம்
புதிய கட்சி
கணவனின் மௌனம்
ஆயுள் தண்டனை
மனைவியின் மௌனம்
எதிர்பார்ப்பின் ஏக்கம்
பொதுமக்களின் மௌனம்
தேர்தல் முடிவு
கடவுளின் மௌனம்
மரணத் தீர்ப்பு!

எழுதியவர் : லட்சுமி (25-Mar-17, 9:47 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 392

மேலே