அம்மா

பற்கள் இல்லா பாலகன் அழுதேன்
உச்சி முகர்ந்து தாய்ப்பால் தந்தாய்
அன்று போல்தான் இன்றும் உனக்கு
மனதில் மாறா மகனின் பாசம்

மழையில் நனைந்தால் கனைக்கும் தந்தை
சேலைத் தலைப்பால் என்தலை துவட்டி
மழையை வைவாய் என்முக வாட்டம்
கண்டால் எழுவாய் அமுது படைப்பாய்

தன்பசி மறந்து என்பசி தீர்ப்பாய்
மற்றோர் மீது கொண்ட என்கோபம்
உன்னில் தீர்ப்பேன் நெஞ்சு நோவாய்
அழைக்கும் குரலுக்கு அன்பு பொங்க

யாவும் மறந்து என்முகம் நோக்கி
மகனே என்பாயே மனது குளிருமம்மா
அன்பை மட்டுமே அளிக்கும் தெய்வமே
என்பிழை பொறுப்பாய் உன்தாள் பணிந்தேன்


ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (26-Mar-17, 10:45 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : amma
பார்வை : 499

மேலே