மனிதன் என்பது மனிதம்

சுயத்தை இழந்து விடக்கூடாது
என்று பாடுபடுகிறான் பாட்டாளி

தன்னை தானே புகழ்ந்து கொள்கிறான்
அரசியல்வாதி
நடிகன்
சாமியார்
கார்ப்பரேட்

நான் நல்லவன் என்று
நீயே சொல்லக்கூடாது
உன் நடத்தை சொல்ல வேண்டும்
பிற மனிதர்கள் சொல்ல வேண்டும்

தமிழ் தமிழன் என்று அரசியல் சுய லாபம் தேடாதீர்கள் இந்நால்வரும்
உண்மையான தமிழனாக
மனிதனாக இருந்தால்
தமிழையும் தமிழனையும்
வாழ விடுங்கள்
நீங்கள் எதுவும் எங்களுக்காக செய்ய வேண்டாம்
நாங்கள் சுயமாக முன்னேறுவோம்
எங்கள் சுயத்தோடு

மனிதன் யாவரும் தமிழன்
தமிழன் யாவரும் மனிதன்

சுயத்தோடு வாழ்பவன் தான் தமிழன்
சுய லாபம் பேசுபவன் அல்ல

தமிழ் தமிழ் என்று அரசியல் செய்யாதீர்

மனிதன் என்பது மனிதம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Mar-17, 10:45 am)
பார்வை : 737

மேலே