ஆசைதான் எனக்கு

அழும் குழந்தையைக் கண்டால்
உடனே என் கைகளில் தூக்கி
மார்போடு சேர்த்துவைத்தணைத்து
பால் கொடுத்து பசியமர்த்த
ஆசைதான் எனக்கு...

பசியென கேட்டும் முன்
என்னாசைத்துணைவணுக்கு
பிடித்த உணவை சமைத்து
பரிமாறிட ஆசைதான் எனக்கு...

வயதான மாமனார் மாமியாருக்கு
என்னென்ன தேவையென்று அறிந்து
அதனை தினமும் பூர்த்தி செய்து
அவர்களின் அன்பு மகளாக
இருக்கத்தான் ஆசை எனக்கு....

இப்படி எண்ணற்ற ஆசைகளோடு
இன்னும் தனித்திருக்கிறேன் - நான்
வரதட்சணை சந்தையில்
பேரத்திற்கு அடிபணியாமல்...
முதிர்கன்னியாய்...

எழுதியவர் : கிச்சாபாரதி (26-Mar-17, 11:34 am)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : aasaithaan enakku
பார்வை : 309

மேலே