என் காதலின் காயங்கள் - சகி

என் வாழ்க்கையில்
தோற்கவில்லை நான் .....

என் காதல்
தோற்றுப்போனது ....

காதலில் உண்மையில்லாத
உன்னிடத்தில் ......

நாம் பிரிந்து வருடங்கள்
பல கடந்துவிட்டது .......

என்னில் உண்டான
காயங்களும் வழிகளும்
கொஞ்சமில்லை உன்னால் ....

உன் இச்சை
ஆசைக்கு விருந்தாக்கவில்லை சொல்லாமல் பிரிந்து சென்றாய் ...

உண்மை உணராதவளாய்
என்வாழ்க்கையின் நிமிடங்களை இழந்தேன் .....

அடகயவனே நீ
பிரிந்ததை எண்ணி
வருந்தி மரணப்படுக்கைக்கு
சென்றுவந்தேன் .......

நடப்பவை அனைத்தும்
நன்மைக்கே என்பதை
உணர்வால் உணர்தேன் .....

என்காதலை உனக்கு
உணரவைக்க அன்று
என்னை யிழந்திருந்தால்
என் காதல் அன்றே
முடித்திருக்கும் உன்னோடு .....

இன்று என் வாழ்க்கை
இன்பமாய் நகர்கிறது

உண்மையான
ஒரு அன்புள்ளத்துடன் ......

தவமின்றி எனக்கு
இறைவனளித்த வரமான
என்னவனுடன்.......

எழுதியவர் : சகிமுதல்பூ (26-Mar-17, 9:50 pm)
பார்வை : 1281

மேலே