வந்துவிட்டோம்

"ஜல்லிக்கட்டு வேண்டும்" என்று போராட ஆர்வத்தோடு இளைஞர் சேரும் காட்சி கண்டு பாடியது....

இளைஞர் கையில் ஒளிமி குந்த
. இந்தி யாயி ருக்குது
வளமை புதுமை யாவு மெங்கள்
. வாக்கி லேபி றக்குது
களையெ டுக்க வந்து விட்டோம்
. கழனி காக்கப் போகிறோம் !
வளைந்தி ருக்கும் தமிழர் நாட்டின்
. வயம்பெ ருக்கப் போகிறோம் !

நேற்று வந்தோர் வாழ்ந்து போக
. நெல்வி ளைத்தோர் சாவதா ?
காற்று வந்து தீண்டு தென்று
. கலங்க ரைதான் நோவதா ?
சோற்றை நம்பும் தமிழர் கெட்டு
. சோப்பு ளாங்கி ஆவதா ?
வேற்று நாட்டு வணிகத் தாலே
. வேளாண் மைபறி போவதா ?

காளைக் கான போரி தல்ல
. காளை யர்கள் எங்களின்
நாளைக் கான போரி தென்று
. நாடு கேட்கச் சொல்லுவோம் !
ஆளும் வர்க்க ஆட்டத் திற்கும்
. ஆடும் காலம் போனது
வாளும் வேலும் இளைஞர் கண்கள்
. வாழ்வி டமாய் ஆனது !

வங்கக் காற்று ஓய்ந்து போகும்
. வாழை கூட ஓயுமே
தங்கச் சூர்யன் ஓய்ந்து போகும்
. தண்ணி லாவும் ஓயுமே
சிங்கம் போன்று நின்ற கூட்டம்
. தமிழி ளைஞர் கூட்டமாம்
எங்கள் கூட்டம் ஓய்ந்தி டாதே !
. எட்டு திக்கும் கூட்டுமே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-Mar-17, 12:37 am)
பார்வை : 74

மேலே