கவலை

கோபம் அஃதே
வேகம் புதிது .

பார்வை அஃதே
அர்த்தம் புதிது

இதழ்கள் அஃதே
மௌனம் புதிது

காதல் அஃதே
ஆழம் புதிது

உணர்ச்சி அஃதே
அழுகை புதிது

தூரம் அஃதே
துயரம் புதிது

ஊடல் அஃதே
உயிரின் வலி புதிது

நேரம் அஃதே
தனிமை புதிது

கண்கள் அஃதே
கண்ணீர் புதிது

இதயம் அஃதே
ரணங்கள் புதிது

நினைவுகள் அஃதே
கவலை புதிது

உயிர் அஃதே
சித்ரவதை புதிது

எழுதியவர் : ரதி ரதி (27-Mar-17, 11:44 am)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : kavalai
பார்வை : 141

மேலே