உயிர் தோழன்

சகுதியில் புரண்டு
தன் நலம் மறந்து
பிறரை வாழவைக்க
பிறர் உயிர் செழிக்க
வயிரார வாய்விட்டு
பிறர் சிரிக்க
உதிரத்தை வியர்வையாக்கி
விதை கனிதர
தரிசு நிலம் பசுமையாக்க
வெயிலில் கருகி வாடி
தன்னை தரிசாக்கும்
உற்ற நண்பன்
அனைத்து உயிர்களின்
உயிர் தோழன் விவசாயி

எழுதியவர் : Rajeswariskumar (27-Mar-17, 12:26 pm)
Tanglish : uyir thozhan
பார்வை : 947

மேலே