எனக்கு பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரம் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்..!

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை
உயிரே வா ..!!

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே
காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார்
என் அன்பே
நீதானே..!

மிக மிக கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்!!!
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வார்த்தை தான்
கண்களை காணவே
இமைகளை மறுப்பதா
வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் காணலா !!

இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம்
பரவசம் அன்பே
இதம் தருமே!!

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்..!
போகும் பாதை எங்கும் உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன்..!

எழுதியவர் : (27-Mar-17, 3:13 pm)
சேர்த்தது : கவி பாரதி
பார்வை : 122

மேலே