இடியாக்ரசி என்ற ஆங்கிலப்படம் ===பழைய படம் நம் சிந்தனைக்கு

ஹீரோ ஒரு சராசரியான ஆள். ஒரு விபத்தில் கோமா மாதிரி நிலைக்கு போய் உறைந்து போய்விடுகிறான். சில நூறாண்டுகள் கழித்து எழுகையில் உலகமே முட்டாள்கள் உலகமாக ஆகிவிடுகிறது.




இதற்கு கதையில் என்ன விளக்கம் தருகிறார்கள் என்றால் நாளாக, நாளாக மனித இனம் சராசரியாக அறிவில் பிந்தங்கி தான் போகும் என. அப்படி ஒட்டுமொத்த உலகமும் முட்டாள்கள் உலகமாக காட்சியளிக்கும் காலகட்டத்தில் கதாநாயகன் விழுத்தெழுகிறான்.




எல்லா இடத்திலும் உணவுபற்றாகுறை. காரணம் என்னவெனில்
குடிநீருக்கு பதில் கோகோகோலா ஊற்றி விவசாயம் செய்வதுதான். குடிநீர் குழாயில் வருவதே இல்லை. கோக் மட்டும்தான் வரும். தண்ணீரில் விவசாயம் செய்யலாம் என சொன்னதுக்கு இவனை பிடித்து எல்லாரும் அடிக்கிரார்கள். அது எப்படி கோக் ஊற்றி விவசாயம் செய்தே பயிர்கள் விளையமாட்டேன் என்கிரது, தன்னியை ஊற்றினால் எப்படி வளரும் என சண்டை பிடிக்கிறார்கள்.




படத்தின் இறுதிகாட்சியில் இவனை தூக்கில் தொங்கவிடபோகும் தருணத்தில் இவன் தண்ணீர் ஊற்றிய செடி ஒன்று துளிர்க்கிறது. அதை பார்த்து எல்லாரும் ஆரவாரம் செய்து இவனை ஜனாதிபதி ஆக்கிவிடுகிறார்கள்.




நேற்று வாட்ஸப்பில் ஒரு தெரிந்த நண்பரின் மகன் ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தான்.




சின்ன வயசுதான். அனுப்பியதும் யதேச்சையான புகைப்படம்.




இவன் வீட்டு ஹால். அதில் இவனும், கூட நாலு நண்பர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.




நாலு பேரும் ஒருவரிடம் ஒருவர் பேசிகொள்ளவே இல்லை. தள்ளி அமர்ந்திருக்கிறார்கள். நால்வர் கையிலும் செல்போன். அதில் மூழ்கியுள்ளனர். அந்த காட்சியை இவன் அப்பா புகைப்படம் எடுத்துள்ளார்.




அருகே நாலு நண்பர்கள் இருக்க, நாலுபேரும் ஒருவருக்கு ஒருவர் பேசாமல், விளையாடாமல் செல்போனில் மூழ்கியிருந்தால் அதன்பின் நாலுபேரும் அங்கே இருந்து என்ன பயன்? அவரவ்ர் வீட்டிலேயே இருந்திருக்கலாமே?




சென்ற கோடையில் ஒரு பார்க் போனேன்.




பார்க்கில் விளையாடிய குழந்தைகள் நிச்சயம் 80- 90 கிலோ இருப்பார்கள். அவர்கள் எடையை தாக்குபிடிக்க முடியாமல் பார்க்கில் இருந்த ஊஞ்சல்களும், குதிரை ராட்டின பொம்மையும் கதறின. எப்போது ஊஞ்சல் அறுந்துவிழுமோ என்ற பயம் எனக்கு.




குப்பை உணவுகளால் அமெரிக்காவில் பெரும்பங்கு மக்கள் ஒபிசீட்டியால் அவதிபட்டு வருகின்றனர். இங்கிருக்கும் இந்தியர்களும் அமெரிக்க வாழ்க்கைமுறைக்கு மாறியன்பின் இந்திய குழந்தைகள் பலரும் ஒபீஸ் ஆகிவருகின்றனர்.




18,19ல் ஒபிசிட்டி அதிகமாக இருப்பதால் டேட்டிங், கல்யானம் எல்லாம் தள்ளிபோய், பாதிக்கபட்டு தனிமரமாக வாழ்க்கையை கழிக்கும் அமெரிக்கர்கள் உண்டு.




40 வயதாகியும் உடல்பருமனால் திருமணம் ஆகமுடியாமல் இருக்கும் இந்திய நண்பர் உண்டு. ஆர்த்ர்ரைட்டிஸ் முதல் பிரசர் வரை எல்லாம் உண்டு.




அவரது தந்தை 70 வயதில் ஒல்லியாக இருப்பார். ஒரே மகனின் உடல்நிலையை கண்டு "இவன் எனக்கு கொள்ளீ வைப்பானா, நான் இவனுக்கு வைப்பேனா என தெரியவில்லை " என சொல்லி அழுதார்




பெண்களில் மூன்றில் ஒருவருக்கு பிகாஸ் இருக்கலாம். மிக இளவயதில் பிகாஸ் வருகிறது. 10,11 வயதில் வயதுக்கு வந்துவிடுகிறார்கள்.




கொடிது கொடிது வறுமை கொடிது:

அதனினும் கொடிது இளமையில் வறுமை




என்றார் அவ்வையார்




அதை மாற்றி




கொடிது கொடிது உடல்பருமன் கொடிது

அதனினும் கொடிது இளமையில் பருமன்




என சொல்லும் நிலைதான் இப்போது.




அனைத்திற்கும் காரணம் பண்பாட்டு சீரழிவே என கருதுகிறேன்




பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்.




அவர்கள் தான் உங்கள் சொத்து. காசு,பணம் அல்ல




வீட்டில் சமைப்பதை சுமையாக கருதவேண்டாம். உணவக கலாசாரத்தை ஒழியுங்கள். அது சரவணபவன் ஆக இருந்தாலும் சரி...மெக்டாலன்ட்ஸ் ஆக இருந்தாலும் சரி. பிறந்தநாள், திருமணநாள் போல ஆண்டுக்கு மிக, மிக அரிதான சமயங்களில் மட்டுமே உனவகம் செல்லவும். மீதநேரம் வீட்டில் சமைத்த உனவையே உண்ணவும்.




மதிய உனவை கட்டிகொடுத்து அனுப்பவும். பள்ளியில், கல்லூரியில் வாங்கி சாப்பிட அனுமதிக்கவேண்டாம்.




எலக்ட்ரானிக் பொருட்களை பிடுங்கி வைக்கவும்...வாரம் ஒரு நாள், இரு நாள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கவும்




குப்பை உணவுகளை ஒழிக்கவும்.




நம் மனோஜ் விஜயகுமார் கேட்டதுபோல் "பிள்ளைகளுக்கு சிகரெட் பிடிப்பதையோ, குடிப்பழக்கத்தையோ பெற்றோர் அறிமுகபடுத்தமாட்டார்கள். ஆனால் அதை விட கொடிய வழக்கமான ஜன்க்புட் வழக்கத்தை ஏன் பெற்றோரே பிள்ளைகளுக்கு அறிமுகபடுத்துகிறீர்கள்" என




இதே நிலை தொடர்ந்தால் இடியாக்ரசி திரைப்படம் உண்மையாகிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.



































Posted by K Selvan

எழுதியவர் : (27-Mar-17, 5:08 pm)
பார்வை : 54

மேலே