சமூகம்

நாட்டின் பொருளாதாரம் என்ற பெயரில் பல குடும்பங்களைப் பலியிட்டு வேள்விகளாய் தமிழக அரசு நடத்துகின்றது மதுக்கடைகளை....

தமிழக அரசின் வருமானமெல்லாம் எங்கே?...
ஏன் எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடமே பிச்சை கேட்கிறது??...
ஜல்லிக்கட்டிற்காக இந்தியாவை விட்டு பிரிவோமென்று உரைத்த மடையர் கூட்டம் எங்கே???...
தமிழ்நாடு தனிநாடானால் இப்போதெல்லாம் கேட்கிறார்களே மத்திய அரசிடம், 40 லட்சம் கோடி கொடு என்று!..
இது போல் எவனிடம் சென்று பிச்சை எடுப்பீர்கள்???...

உலக வங்கியிலே கடன்...
என் பெயரிலே என் அனுமதியின்றி நாடு வாங்குகிறது....
அப்பணத்தையெல்லாம் எனக்கா கொடுத்தது??....

வேதிப்பொருள்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட அரிசியை மட்டும் இலவசமாகக் கொடுத்துவிட்டு,
காலம் காலமாக ஏமாற்றுகிறது....

ஒரு பொருளை வாங்கினால் அப்பொருளை வாங்கி விற்பவன், அதை தயாரித்தவன் என்று இருவருக்கும் சேர்த்து
நுகர்வோர் கட்டுகிறோம் TAX என்னும் வரி....

தேவைக்குள் இருந்தால் அது செல்வம்...
தேவைக்கு அதிகமாக இருந்தால் அது குப்பை...
அதனால் விளைவது நோய் மட்டுமே....

பசி தீர்ந்தபிறகும் உணவு உண்டால் என்னவாகும்? என்று சிந்தித்தால் உடல் ஆரோக்கியம் கெடாது ஞானத் தங்கமே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Mar-17, 6:42 am)
Tanglish : samoogam
பார்வை : 1180

மேலே