கால நதிக் கவிஞன்

அழகின் அன்பு நண்பன் அவன்
பார்க்கும் பூக்களை கவிதையால் பறிப்பான்
வீசும் தென்றலுடன் கைகோர்த்து நடப்பான்
பேசும் கிளியுடன் பைந்தமிழில் உரையாடுவான்
கூவும் குயிலுடன் கவிக் குயிலாய் கூவுவான்
பாயும் நதியை நெஞ்சணைத்து நீந்துவான்
வான நிலவுக்கு வாழ்த்துப் பாடுவான்
தேய்ந்தாலும் குறைவில்லை என்று போற்றுவான்
வானப் பறவைகளின் சிறகினை கவிதையில் ஏந்திப் பறப்பான்
காற்று வெளியெல்லாம் காதலைப் பாடி திரிவான்
நெஞ்சமெல்லாம் பூந் தோட்டம் அமைப்பான்
வண்ண மலர்களை வாரியணைத்து முத்தமிடுவான்
நீல விழியினரைத் தீட்டும் ஓவியன் அவன்
கால நதிக்கரையின் முடிவற்ற கற்பனைக் கவிஞன் அவன் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-17, 10:15 am)
பார்வை : 52

மேலே