நன்றி காதல் தந்தமைக்கு

இதயத்தின் துடிப்பும் சீராக இல்லை !
இரவு பொழுதின் உறக்கம் இனிதாக இல்லை !
இனிமேல் கனவுகள் காண்பது உறுதியில்லை !
இனிய பாடல்கள் இனிதாய் கேட்கவில்லை !
இதயத்தின் அழுகுரல் உனக்கு கேட்கவில்லை !
நாளும் பொழுதும் நலமாக நகர்வதில்லை !
நானும் நன்றாக இல்லை ! ஆயினும்
நன்றி !
நன்றாக என்னுள் காதல் விதைத்து விட்டு சென்றமைக்கு

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (29-Mar-17, 12:32 pm)
பார்வை : 155

மேலே