அவள் சிரித்தால் அங்கே ஓர் சந்திரோதயம்

அவளுக்கு கருமையின் கவிதை என்று பேர்
அவள் நெஞ்சில் போற்றுவதோ வெள்ளை நிறம் !

அவள் கருவிழி காதல் கவிதை சொல்லும்
வெள்ளை விழி எழுத எழுத விரியும் !

அவளுக்கு கார்முகில் கருமை வண்ணம்
கருமை உதட்டில் வெள்ளை வெளேர் சிரிப்பு !

மலை நிறத்தவள் இந்த மாலை அழகி
சிரித்தால் கொட்டுது வெள்ளை அருவி !

கார்முகில் கருமை அவள் மேனி நிறம்
அவள் சிரித்தால் அங்கே ஓர் சந்திரோதயம் !

இந்த கருப்பு வெளுப்பு காம்பினேஷனுக்கு
உலகில் ஈடேது ?

----கவின் சாரலன்
கருப்பு வெளுப்பு விரும்பிகள் படிக்கவும் .
கலர் விரும்பிகள் தவிர்க்கவும்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Mar-17, 4:42 pm)
பார்வை : 332

மேலே