உறவுகளை அரவணைப்போம்

உறவுகளின் அருமையை
உணர்வதே இல்லை நாம் !!!

ஆண்டவன் இறப்பிற்கு முன்
ஒவ்வொருவருக்கும் மரணத்தின்
எல்லை வரை சென்று வரும்
அனுபவத்தை கொடுக்கிறேன்
நாம் நம்முடைய தவறுகளை
திருத்தி கொள்ள !!!

ஆனால் அதனை உணர்ந்து
கொள்பவர்கள் வெகு சிலர் மட்டுமே !!!

பெரும்பன்மையானவர்கள் தங்கள்
அதிர்ஷ்டத்தாலும், தாங்கள் செய்த
புண்ணியத்தாலும் பிழைத்து
விட்டதாகவே கருதி திரும்பவும்
தான் என்ற அகந்தையில்
உறவுகளை புறக்கணிக்க
தொடங்கி விடுகின்றனர்...

ஆயிரம் சொந்தங்கள் நம்மை
சுற்றி இருக்க நாமோ
அகந்தையால் அனைவரையும்
சிற்சில காரணங்களுக்காக
ஒருவருக்கொருவர் சொந்தங்களுக்குள்
சண்டையிட்டு கொண்டு
பிரிந்து வாழ்கிறோம் !!!

ஆனால், இன்றைய சூழலில்
நம் இளைய தலைமுறையினரும்,
குழந்தைகளும் ஒட்டு மொத்த
குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன்
வாழவே விரும்புகின்றனர் !!!

ஆகவே, உறவுகளே !!!
இனியாகிலும் சண்டை
சச்சரவுகளை மறந்து
குழந்தைகளின் உணர்வுகளுக்கு
மதிப்பு அளித்து
ஒரே குடும்பமாய்
ஒற்றுமையை வாழ்வோம் !!!

அது சாத்தியம் இல்லாத பட்சத்தில்
மாதத்தில் ஒரு நாளோ,
குழந்தைகளின் பிறந்த நாளன்றோ
அல்லது ஏதாவது பண்டிகை
நாட்களிலோ குடும்பத்தில்
அனைவரும் ஒன்றாய்
கூடி மகிழ்ச்சியாய்
இருந்தால் போதும் !!!

உங்கள் குழந்தைக்கு
அவர்கள் வாழ்வில்
நீங்கள் கொடுக்கும் பரிசுகளில்
இதை விட பெரிய பரிசு
வேறுதுவும் இருக்க முடியாது !!!

முயற்சி செய்துதான்
பாருங்களேன் !!!
கோபமாய் இருக்கும்
நம் சொந்தங்களிடம்
நாம் தாழ்ந்து போனால்
தவறொன்றும் இல்லை !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (29-Mar-17, 5:58 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 106

மேலே