மன்னித்து விடு உழவா

இவன் காக்கை எனும் நினைப்போ
ஓர் பருக்கு சோற்றை வணங்கிட..
இவன் மண்ஊரும் புழு எனும் நினைப்போ
விளையும் மண்ணின் கதிதனை கேட்டிட..
இவன் கருகிய முகிலென்னும் நினைப்போ
கதறி ஓர் நாள் கண்ணீர் விட்டிட..
இவன் வால் நீட்டும் நாயென்ற நினைப்போ
உப்பிட்டவனுக்காய் ஓர் நன்றி காட்டிட..
பல வள்ளலார் வாழ்வதாக நினைப்போ
வாடிய பயிர்தனை கண்டு வாடிட..
இவனுள் மனிதம் உள்ளதென்ற நினைப்போ
உழவனும் மனித இனமே என கொண்டிட..
உழவா ! மன்னித்து விடு இனி மறந்தும் விடு
நாளை விடியும் என்றதொரு நினைவை..
இவன் வருவான் உனக்காய் ஓர்நாள்
பசைகோந்து அது புசிக்கு ஆகா எனும்போது


$வினோ..

எழுதியவர் : வினோ.... (30-Mar-17, 7:14 am)
பார்வை : 1673

மேலே