அநாதை

ஐந்து நிமிட சுகத்திற்க்காக இடம்கொடுத்து
ஆயுளுக்கும் அனாதை என்ற பட்டத்தை கொடுத்துசென்றாயே...!

அங்கீகாரம் இல்லா உன் உறவுக்கு சாட்சியாய்
என்னை ஈன்றதும் ஏனோ..?

எச்சில் இலை போடும் குப்பைதொட்டியில்
என்னையும் போட்டு சென்றாய்...!

குப்பை தொட்டையில் விழும் இலைக்குக்கூட
சில நாய்கள் தவம் கிடக்கிறது
என்னை தொட்டு தூக்ககூட யாரும் இல்லை...!

தூக்கி எறிந்த எச்சில் இலைகள்
விழுந்த வேகத்தில் தெரிக்கும் சில பருக்கைகளில் உயிர் பிழைத்தேன்...

எனக்காக அந்த சில பருக்கைகளை விட்டுகொடுத்த
நாய்களுக்கு இருந்த அனுதாபம்கூட
உனக்கு இல்லாமல் போனதும் ஏனோ..?

கள்ளிபாலோ கருமமோ ஏதோ ஒன்றை
திணித்து நிருத்தி இருக்கலாமே என் மூச்சை...

போட்டுகொள்ள உடையுமில்லை
உயிர்வாழ உணவுமில்லை வாழ
எந்த தேவையும் தன்னிரைவாய் இல்லை என்னிடம்
எப்படி வாழ்வேன் மனிதனாய்...

நல்ல வேளை என்னை ஆணாய் பெற்றாய்
இப்பொழுது உயிர் வாழ போராடுகிறேன்
பெண்ணாய் இருந்திருந்தால் மானம் காக்க போராடியே பொழுது சாய்ந்திருக்கும்...

இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் நீயும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்
என்னை போல் இன்னும் எத்தனை சகோக்கள்
அனாதை என்ற பட்டத்துடன் அடையாளம்
இல்லாமல் அனுபவித்துகொண்டிருக்கிறார்களோ..!!

நீ செய்த தவறுக்கு சாட்சியாய் அல்ல
"சாபமாய் எங்கள் வாழ்கை".......!!!

( தவறான பாதையில் சென்று இளம் மொட்டுக்களை வீசி எறியும் சில சில தாய்களுக்கு)

எழுதியவர் : ரேவதி மணி (30-Mar-17, 10:06 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : anaathai
பார்வை : 134

மேலே