மனிதனை தேடுங்கள் உங்களுக்குள்

ஒழுக்கமில்லாதவன் மனிதனாக வாழ்வதற்கே தகுதியற்றவனாகிறான்...
இதில் அவன் காவி அணிந்தாலென்ன?...
கடவுளென சிலைக்குக் கற்பூரம் காட்டினாலென்ன??...

தூய்மையில்லாமல் வாழும் மனமே நரகமென்று உணர்ந்தோர் தம் மனதை அசுத்தம் செய்யார், பொறாமையால்.....

ஆசையைத் துறந்தவர் எவருமில்லையென ஆசையைப் பெருக்கிக் கொண்டே செல்லும் மனிதர்களைக் கண்டாலே சிரிப்பு தான் வருகிறது, தங்களுடைய துன்பத்திற்குத் தாங்களே வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதால்....

ஆன்மா கொண்ட ஆசையாலே உடலை பெற்று உலகில் வந்துலாவுகிறோம், மனிதர்களென்ற பெயரில் உருவில் காசு, பணம், சொத்து தேடி பேயாக....

பொய்கள் பல உரைப்பவனுக்கு பொய்யாமொழி என்று பெயரிட்டால் எப்படி பொருந்தாதோ, அது போலே மனிதர் என்ற பெயரும் நமக்குப் பொருந்தவில்லை பேராசை கொண்டு வாழ்வதாலே....
ஆதலால், ஆளுக்கொரு பெயரிட்டேன், ஆசைகளுக்கேற்றாற்போல்...

நல்ல ஆசைகளுக்குத் தகுந்தாற்போல் நற்பெயர்களும், கெட்ட ஆசைகளுக்குத் தகுந்தாற்போல் கெட்ட பெயர்களும் விளங்க, மனிதனென்பவன் மலையெறிவிட்டான் முழுவதுமாக.....

தேடுங்கள்...
தேடுங்கள், மலையேறிய மனிதன் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறானா?? என்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Mar-17, 9:03 pm)
பார்வை : 849

மேலே