சன்னத்து சணலு

பாட்டிம்மா அந்த ஜன்னத்தை சணலு

கன்னத்தில அறஞ்சிட்டான்.

😊😊😊😊😊
என்னடி மங்கை சன்னத்து சணலு-

ன்னு சொல்லற?

😊😊😊😊😊

சாக்குப் பையை சணல்லதான்

தயாரிப்பாக. சணலு போயி யாரடி

அறையும்? சன்னத்துன்ன என்னடி.

சன்னத்துங்கறது தமிழ்ச் சொல்

இல்லையே.

😊😊😊😊😊
பாட்டிம்மா, பக்கத்து வீட்டு காவேரி

இருக்காங்ளே அவுங்களோட மகன்

ராஜஸ்தானில வேல பாக்ஙறவரு

அஞ்சு வருசம் கழிச்சு குடும்பத்தோட

வந்திருக்காரு. அவரோட பையன்

பேரு சணல் (vigorous). அந்தப்

பையன் சரியான குறும்புக்காரன்.

அந்தப் பையன் அவந் தங்கச்சி

'ஜன்னத்' -தை அடிச்சுட்டான்

பாட்டிம்மா. அப்பறம் நா அவன

மெரட்டி காவேரி பாட்டிகிட்ட

சொல்லிட்டு வந்தெம் பாட்டிம்மா.

😊😊😊😊😊😊

அந்தப் பையன் சரியான

மொடக்குடி(குறும்பு)த்தனம் செய்யற

பையனா இருப்பாம் போல.

சரிடி மங்கை, நாந்தான் எந்தப் பேரா

இருந்தாலும் அந்தப் பேரோட

அர்த்தம் தெரிஞ்சுக்கறவளாச்சே

இப்பச் சொல்லுடி சன்னத்து சணலு,

ரண்டுக்கும் என்னடி அர்த்தம்.

😊😊😊😊😊

பாட்டிம்மா தமிழாசிரியர்கள், தமிழ்ப்

பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சி

நிலையங்கள், தமிழ் வளர்ச்சித்

துறைல வேலைல இருக்கற 95% -க்கு

மேற்பட்டவங்க, பெரிய படிப்புப்

படிச்சவங்க எல்லாம் அவுங்க

பிள்ளைங்களுக்கு தமிழ்ப்

பேருங்கள வைக்கறதை கேவலமா

நெனச்சு அர்த்தம் தெரிஞ்சோ

தெரியாமலோ, இந்திப்

பேருங்களயும் பிறமொழிப்

பேருங்களையுந்தான்

பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க.

😊😊😊😊😊😊😊

என்னத்தச் சொல்ல?

தமிழ் நாட்டில இந்தியைத்

தாய்மொழியாப் பேசறவங்க 10

லட்சம்பேராவது இருப்பாங்க.

அவுங்கள்ல ஒருத்தர்கூட தன்

புள்ளைக்கு தமிழ்ப் பேர ல

வச்சிருக்கமாட்டாரு. அவுங்களப் பாத்து தமிழர்கள் திருந்தணும். தாய் நம்மகூட நம்ம உயிருள்ள வரைக்கும் இருக்கமாட்டா. ஆனா நம்ம தாய்மொழி நம்ம மூச்சு அடங்கறவரைக்கும் நம்மகூபத்தான் இருக்கும் மங்கை.

😊😊😊😊

நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு

சரிதான் பாட்டிம்மா. நம்மகிட்ட

ஒற்றுமை இல்லாததால நமக்கு பிற

மாநிலத்துக்காரங்ககிட்ட இருக்கற

தாய்மொழிப் பற்றும் மொழி சார்ந்த

இனப்பற்றும் இல்லங்க பாட்டிம்மா.

ஊரு ரண்டனா கூத்தாடிங்களுக்கு

கொண்டாட்டம்னு சொல்லுவாங்க.

இங்க ஆளுங் கட்சியும் தமிழர் நலன்

சார்ந்த பொதுப் பிரச்சனைகள்லகூட

ஒண்ணு சேராம எதிரிங்க மாதிரி

நடந்துக்குறாங்க. அதான்

கன்னடக்காரங்க உச்சநீதிமன்ற

ஆணையவே மதிக்கிறதல்ல.

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢
சிந்திக்க; மொழிப் பற்றை வளர்க்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢 Jannat என்பது அரபிச் சொல். இதை இந்தியிலும் பயன்படுத்துகிறார்கள். Janna =Heaven, Paradise ஜன்னத்துக்கு சோலை என்ற பொருளும் உண்டு என்று கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதி 'தி இந்து'வில் வெளியான "ஆதிப் பெற்றோர் தமிழர்களே' என்ற ஆய்வுக் கட்டுரையில் கூறுகிறார். இக்கட்டுரை எழுத்து கட்டுரைப் பகுதியில் உள்ளது. தமிழே உலகின்.முதன் மொழி என்பதற்கு இந்தக் கட்டுரையே நல்ல சான்று.

எழுதியவர் : மலர் (1-Apr-17, 1:55 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 261

மேலே