யார் முட்டாள் -கங்கைமணி

பெண்ணினிதயம் திருடுமவன் பிறர்
கண்ணில் தெரிவான் "காதல் முட்டாள்"

காமம்களையா மனையாள் கண்ணில்
கணவன் தெரிவான் "உணர்வற்ற முட்டாள்"

நட்பாய் பழகி நல்லெண்ணத்தை திருடி
நயவஞ்சகம்புரியுமுன் நண்பனின் பார்வையில்
நீ "நம்பிக்கை முட்டாள்"

பின்னாலிருந்து கடுஞ் சொல்லாளிகழ்ந்து-பின்
முன்னாள் புகழுமவர், உள்ளம்
சொல்லுமுனை "புகழ்ச்சி முட்டாள்"

இன்பம் பறித்து அனாதையாய் விடுத்த ,பிள்ளையின்
துன்பம்கண்டு துடிக்கும் பெற்றோர்
சமூகப்பார்வையில் "பாசத்தின் முட்டாள்"

தன்னிட மெதுவு மில்லாநிலையிலும்
தன் தங்கைக்கு கொடுக்க-
தன்னையே இழக்கும் அண்ணன்
மனைவியின் பார்வயிலவன்
"சகோதர முட்டாள் "

ஓடியுழைத் துக்கார மறந்து
உண்ணா துறங்கா நல்லுடலையுங் கெடுத்து
கடு நோயிலே படுத்து பணமாவயுமிழக்க-
காலம் கூறுமே நம்மெதிர் நின்று.
மானிடா நீ வாழத்தெரிந்தும் வாழாதிறக்கும்
"முட்டாள் பிறப்பென்று"

தன்னை யறியா பிறரை இகழும்
மூடர் எவரோ அவரே "முட்டாள்"
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (1-Apr-17, 4:01 pm)
பார்வை : 224

மேலே