ஆகாயச் சோலையிலே

ஆகாயச் சோலையிலே
அழகழகாய் மலர்ந்திருக்கும்
நட்சத்திரப் பூக்களை
வானவில்லில் தொடுத்துன்றன்
கார்மேக கூந்தலிலே
காதலுடன் சூட்டிடவா
மின்னல் கீற்றினையே
மாலையாக்கிப் போட்டிடவா??

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Apr-17, 12:30 pm)
பார்வை : 76

மேலே