என் வானம்

என் வானம்!
என் அழகிய வானம் நீ – உன்
காலடிச் சுவடுகள் பதியும் தரைமண் நான்!
கருணைக் கோயிலின் கடவுள் நீ!
உன்னைத் தொழுதிட ஆசை எப்பொழுதும்!
உன் அழகிய கனவுகளை இருளாக்கி;
என் கனவுகளுக்கு ஒளி கொடுத்”தாய்”!
கடவுளும் தோற்கும் உன்னிடம்!!
என் கவிதை தவமிருக்குது உன்னை எழுத!!
உன் விரிந்த பாதங்களைப் பார்க்கும்போது- நீ
பட்ட துயர் தெரியுதே எனக்கு!
எனக்காக தொலைத்தாய் உன் கைரேகையை;
எப்பொழுதும் என் ஆயுள்ரேகை நீ!
தடுமாறும் நேரத்தில் தாங்கினாய் நீ!
என் துன்பத்தையெல்லாம் சுமந்”தாய்” நீ!
என் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் - உன்
துன்பங்கள் புதைந்திருப்பதை அறியேன்!
என்னை பத்திரமாக கரைச் சேர்க்க
கடலுக்குள் இறங்கினாய் நீ!!
உன்னைக் காணாத கண நிமிடம் கூட
என் இதயம் கனக்குதே!
கிளைகளை வேர்கள் தாங்குவது போல்
என்னை தனியாய் தங்கினாய் நீ!
தூய்மையான உன் அன்பை மட்டும்
சுவாசிக்கிறேன் நான்!
கவிஞராக பிறக்கவில்லை –உன்னை
எழுதியதில் கவிஞர் ஆனேன்!
பூமி மீது கோபம் எனக்கு!
பூமி கூட உன்னை சுமக்குதே!
என்னைச் சுமந்த உன்னை சுமக்க
ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
கேள்வி எனது!!!!!!! கடவுளின் பதில் என்னவோ!!!!!!!!!!!.
ர.ரம்யா. . .

எழுதியவர் : ர.ரம்யா (4-Apr-17, 4:09 pm)
Tanglish : en vaanam
பார்வை : 328

மேலே