மாறியது ஜோடி

அன்று நம்மிருவரையும் பார்த்தவர்கள்
ஜோடிப் பொருத்தம்
பிரமாதம் என்றனர்
இன்றும் ஜோடியாகத்தான்
செல்கிறாய்
உடன் செல்ல வேண்டியவன்
உங்களிருவரையும்
ஏக்கத்துடன் பார்க்கிறேன்
நீயோ இரக்கமின்றி
கடந்து செல்கிறாய்
மாறியது ஜோடி
மாறவில்லையடி நான்

எழுதியவர் : லட்சுமி (4-Apr-17, 10:36 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : maariyathu jodi
பார்வை : 628

மேலே