பாடல் --முஹம்மத் ஸர்பான்

(குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே...என்ற பாடல் ராகத்தில்)

செவந்த இதழருகே
சிறு மச்சமாய் முளைத்தவளே

கண்ணைக் கட்டி அலைகையில்
உந்தன் துணை தேடுறனே

என் கனவினில் உடையாக
உந்தன் நிழல் கேட்குறனே


சிறு முள்ளின் நுனி ஓரம்
என் விழியின் துளி ஈரம்
காதலால் விடுமுறை நாளிலும்
அறுவடை நாளென ஆனதே!

அட காற்றோடு கலந்த நெஞ்சம்
உன்னோடு வருவது போல்
மூங்கில் கொலுசோடு தான் கவிபாடுதே!
அட காமம் துறந்து எருக்கம் பூவும் உதிர்கிறதே!

(செவந்த இதழருகே)



செவ்விதழ் பழுத்த காதலனே!
செவ்வாழை முத்தம் தருவாயா

செங்காட்டு நிலவின் சிநேகிதியே!
செங்குழல் பரிசாய் தந்திடுவேன்

மாராப்பில் தலை சாய்ந்து
மடி மீது போர் புரிந்து
நெருங்கிய இருக்கம் இனித்திட
தாகமும் குளிராய் தீர்ந்ததே!

அட மலரோடு வாசம் போல
கார்குழல் வெட்கம் கண்டேன்
நீ பார்க்கும் இடம் பூப்பபூக்குதே!
இனி பொன் மேனி எங்கும் வியர்வை வாக்கியமே!

(செவந்த இதழருகே)


மனமெனும் உதிர நீர்விழ்ச்சி
பல முறை தவழ்ந்து விளையாடு

கனவெனும் உதயச் சந்திரனே!
ஒரு முறை சேலை கட்டி விடு

பங்குனியில் ஒரு சிரிப்பு
மார்கழியில் ஒரு முத்தம்
ஆயுள் மண்ணில் முடியும்
வரை நிழல் வர நாடுதே!

சிந்தும் கண்ணீரில் உன்னுருவம்
என் கண்களும் காண்கிறதே!
நான் வாழும் வாழ்க்கை உனக்காகவே!
இனி மரணம் கூட எமக்கு சிறு பொம்மையடா

(செவந்த இதழருகே)

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (7-Apr-17, 2:11 am)
பார்வை : 118

மேலே