தமிழகம்

கணினியும், மனிதனும் கைகோர்க்கும் இக்காலத்திலும் கள்ளம், கபடமே தலைவிரித்தாடும் தமிழகமிது....

கணினியைக் கொண்டே கணித்து அழிக்கும் வேலையை அருமையாகச் செய்யும் தமிழகமிது....

கணினியிலே உருண்டு புரண்டாலும் மனிதா நீ கடைசியில் உணவு வேண்டி நிற்பதோ இயற்கையிடம் தான்...

குடிக்க கூழ் இல்லாவிடிலும்,
ஊத்திக்க சாராயமும் தொட்டுக்க ஊறுகாயும் வேண்டி நிற்கும் தமிழகமிது...

குற்றவாளிகளெல்லாம் கொட்டமடிக்கும் கூடாரமாய் அரசியலே மாறியதால், தமிழகமிங்கு தவிக்குது....

யாரும் சுத்தமில்லை என்பதால் தட்டிக் கேட்க முடியாமலே மனம் புழுங்கி கதறுது....

வெளியில் தெரியாத வரை எதுவுமே தவறில்லை என்றே,
உண்ணத் தகாத உணவையெல்லாம் சந்தையில் விற்குது...
அதிக லாபம் பார்க்குது...

மூடிவைத்த கள்ளமெல்லாம் முடிவுக்கு வருகையிலே,
எங்கும் பிறந்திடும் நீதி..
அது வரையிலே தொடர்ந்திடுமே பீதி..

இயற்கையே அரசன்,
இயற்கையே இறைவன்,
யாவருக்கும் யாவும் வழங்கி, ஏமாற்றம் தாராத இயற்கையே இறைவன்..
மனிதர்களெல்லாம் சாத்தான் கூட்டம்,
பறிக்கவும், அழிக்கவும், ருசிக்கவும் ஒன்று கூடும் இந்த மனிதர்களெல்லாம் சாத்தான் கூட்டம்...
இவர்களின் நீதியும் நேர்மையும் சாத்தானையே பூஜிக்கும்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Apr-17, 7:31 am)
Tanglish : thamilagam
பார்வை : 965

மேலே