ஆசிரியர்-மாணாக்கன் ஓர் உரையாடல்

ஆசிரியர் (வகுப்பு மாணவர்களை நோக்கி) : அன்பு மாணவர்களே இன்று
சாலை விபத்து தவிர்க்கும் நாள் - இன்று நான் கூறுவேன் ,நீங்கள்
சாலையில் நடக்கும்போது , சாலைகளை குறுக்கே கடக்கும்போது
மற்றும், உங்கள் சைக்கிளிலோ ,ஸ்கூட்டரிலோ பயணம் செய்யும்போது
செல் போன்களில் பேசிக்கொண்டு போவதை தவிர்க்கணும் இது
உங்களுக்கு பாதுகாப்பு மனதில் வைத்துக்கொள்க





மாணவன் : ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் சரியே; ஆனால்,ஐயா
நேற்று நீங்கள் உங்கள் சிறுவனை ஸ்க்கூற்றில்
அழைத்துச்சென்று போனீர்கள் அப்போது நான் தெருவில்
நடந்து சென்றேன்; நீங்கள் ஹெல்மெட் அணியவில்லை,
நீங்கள் மொபைல் இல் பேசிக்கொண்டும் போனீர்கள்
இது எப்படி ஐயா ................................


ஆசிரியர் : டேய் முந்திரிக்கொட்டை , வாய்மூடு ...............

(வேறு வலி இல்லாமல் நழுவுகிறார்)

பின் குறிப்பு : இப்படித்தான் இன்று அரசியல் வாதிகள் சரி
ஆசிரியர்களும் சரி சொல்வதொன்று
செய்கைகள் வேறு; போதிப்பது ஒன்று
செயல்படுவது ஒன்று-ஒன்றுக்கொன்று
முற்றிலும் முரணாக!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Apr-17, 8:56 am)
பார்வை : 485

மேலே