எம் தமிழ்

உணர்வுகள் உறவாட உணர்ச்சிகள் திளைத்தோட வித்திட்டு விதையாய் வீரமாய் வீற்றெழுந்து....
நயமாய் வழிந்தோடி நாவினில் ருசிக்கொண்டு மொழியின் கருவாய் மரபை போற்றும் எம் தமிழே !!!!

சங்ககால மன்னனாம் சேர சோழ பாண்டியன் உன் புகழ் பாட பொற்காலமாய் நெளிவுகளை கடந்து வற்றாத நதியாய் ஊற்றாய் உருவெடுத்து செந்தமிழாய் கொடுந்தமிழாய் தொல்காப்பியத்தில் கரைந்து இரண்டற கலந்து பொருளாய் ஆக்கமாய் புறமாய் திரிந்து தொன்மையாய் தொல்கப்பியனார் சுவையூட்ட முன்னின்று மெய்த்திரிந்தாய்...

காதல் நெறிமுறை பண்புகளாய் உன் சுவை அறிந்த வள்ளுவன் நுட்பமாய் மெருகேற்ற உலகத்துவம் வாய்ந்து சொற்களில் நகையாடி நளினமாய் சிறப்புற்றாய்...

பெண்மையின் பெருமையை சிலம்பு-அதிகாரமாய் கருவுற்று ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றென இணைந்து உன் புகழ் பாட உன்னில் திளைத்து இளைத்து நினைத்து நயமாட சொற்களாய் பிறப்பேனோ !!!

ராம அயணமாய் காவியமாய் கம்பனின் வரிகளில் பல காண்டங்களை கண்டறிந்த ஈடில்லா உன் புகழ் கந்தமாய் புராணமாய் வான் எழுந்து இறைவனின் இறைஅருள் பெற்று இமயமாய் நிலவிற்கு அழகூட்டும் அழகின் உருவாய் ...

மொழிகளின் துடிப்பால் புகழ் கொண்ட எம் மண்ணை கவிகளின் வீரக்கவிகளில்
புரண்டோட அடிமை விளங்கை உடைத்தெறிந்து சுதந்திரம் கண்டாய் ...

இனி ஒரு மொழி இல்லை உன் புகழ் பாட ...காலங்கள் காவியமாய் மரபுகளை போற்ற மற்றுமொரு ஆண்டில் புதிதாய் பூக்கிறாய் பழமையை பாட- புத்தாண்டில் தமிழனின் புகழ் கூறும் இனிய ஆண்டாய் ....

எழுதியவர் : கௌரிசங்கர் (7-Apr-17, 2:37 pm)
சேர்த்தது : gowrishankar628
Tanglish : yem thamizh
பார்வை : 407

மேலே