காதல் பழக வா-15

காதல் பழக வா-15
சிவந்து நிற்கும் ரோஜாவாய்
நீ நிற்க
உன் கோவம்கூட
இந்த கண்ணனுக்கு பிடித்தம்தான்
என் செல்ல கண்ணே!!!

ஜான்சி ராணி போல
வாளெடுத்து நீ வீச
வானவில் என்னை வளைத்ததுபோல்
என் வானமெல்லாம் வண்ணம்
நிரம்புதடி என் பேதை பெண்ணே!!!!

தோல்வி என்று நான்
ஒன்றும் கண்டதில்லை
என்னை தோற்கடிக்கவெனவே
நீ என்னை நெருங்கிவந்தால்
நூறு தோல்விகளை நான்
வாங்கி கொள்வேன்
உன் நெருக்கம் மட்டுமே
எனக்கு போதுமடி என் காதல் மணியே!!!!

"ராதி......"
ராதியின் பெயரை உச்சரித்துக்கொண்டே ஒரு கூட்டம் வர அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியாமல் போனது.......

"ஹே, மை டார்லிங்ஸ் வந்துட்டீங்களா, எப்படி வீட்டை கண்டுபிடிச்சீங்க, சாரிப்பா......எங்க கல்யாணம் அவசரமாய் நடந்ததாலே உங்களை எல்லாம் கூப்பிட முடியாம போச்சு, ரொம்பவே மிஸ் பன்னேன்பா, பட் நொவ் ஐ எம் சர்ப்ரைஸ் " என்று ஒன்றுமே தெரியாதவள் போல நடித்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களின் அருகாமை ராதிக்கு சந்தோஷத்தையும் தைரியத்தையும் கொடுத்தது.....

"டோன்ட் வர்றி பேபி, நீ யாரு, எங்களோட பெஸ்டி ஆச்சே, உன்ன பார்க்காம, உன்ன பத்தி யோசிக்காம இருந்துருவோமா.....உன் மேரேஜ் நியூஸ் வந்தது, உடனே உன்ன பாக்க கூட்டத்தை கூட்டிட்டு வந்துட்டோம், இன்னும் ஒரு வாரத்துக்கு உன்னோட தான் இருப்போம், அலோவ் பண்ணுவ தானே" ராதியின் திட்டத்தின் முதல் காயை நகர்த்தும் வேலையை அவளின் நண்பர்கள் தெளிவாக செய்ய ஆரம்பித்தனர்....

"அது வந்து, நான் எப்படி சொல்றது, இங்க அத்தை, பெரியப்பா, மாமான்னு பெரியவங்க எல்லாரும் இருக்காங்க, அவங்களோட பெர்மிஷன் இல்லாம நான் எதுவும் சொல்லமுடியாதே" என்று ராதி தயங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அவளின் அத்தை ராதியின் நண்பர்கள் இருக்க பெருந்தன்மையோடு சம்மதிக்க ராதியின் ஆட்டத்தில் முதல் வெற்றி உறுதியானது......

"கெஸ்ட் ரூம் இருக்கு, நீங்க எல்லாம் அங்கயே தங்கிக்கோங்க, ராதி உன்னோட பிரண்ட்ஸ்க்கு எந்த குறையும் இல்லாம நீதான் பாத்துக்கணும், அவங்களுக்கு என்ன தேவையோ அதை எல்லாம் பாத்து பாத்து செஞ்சு அவங்கள நல்லவிதமான கவனிச்சிக்கோ, சரி தானம்மா" என்று ரமா விருந்தோம்பல் தொனியில் கூற ராதிக்கு சந்தோஷத்தில் மனம் துள்ளியது....

தான் நினைத்தது எல்லாம் நடக்க ஆரம்பித்துவிட்டது, இனி என் திட்டமும் வெற்றி பெற்று விட்டால் அதைவிட பெரிய சந்தோசம் வேறு எதுவும் இல்லை என்றே அவளுக்கு தோன்றியது.....

"தேவி, கலா எல்லாரும் வாங்க கெஸ்ட் ரூம்க்கு போகலாம்"

ராதி புத்திசாலிதான், ராதிக்கு கண்ணியமான ஆண் நண்பர்களும் இருக்க அவள் இப்போதைக்கு தோழியரை மட்டும் வீட்டிற்கு வர சொன்னதற்கு காரணம் கண்ணனின் குடும்பம் அப்படி......பெண்கள் ஆண்களோடு நட்பு வைத்து கொள்வதை அவர்கள் அந்த அளவுக்கு விரும்ப மாட்டார்கள் என்றே ராதிக்கு தோன்றியது, அவளுக்கு சாதகமாக அந்த குடும்பத்தை மாற்றும் முயற்சிக்கு அவளின் ஆண் நட்பு தடையாய் நிற்கலாம் என்ற யோசனை வரவே தோழியரை மட்டுமே தற்போதைக்கு தன் திட்டத்தில் இணைத்து கொண்டாள்......

"எப்படிடி இப்படி நடந்தது, யாருனே தெரியாத ஒருத்தன் தாலி கட்டினா, உன் குடும்பத்தை விட்டுட்டு இங்க தனியா வந்துடுவியா, எப்படிப்பட்ட குடும்பம், எப்படிப்பட்ட மனுஷங்கனு ஒண்ணுமே தெரியாம எந்த தைரியத்துல இங்க இருக்க, முதல்ல இங்க இருந்து நீ கிளம்பு, உன் வீட்டுக்கு போகலாம், உன் அம்மாகிட்ட நாங்க பேசறோம், அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்" உணர்ச்சி வேகத்தில் மித்து பேச அவளை சமாதானம் செய்வதற்குள்ளே ராதிக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.....

"உனக்கு அந்த கண்ணனை பத்தி ஒன்னும் தெரியலடி, நான் இங்க இருந்து போகாம இருக்க என்னென்ன செய்யணுமோ எல்லாம் செஞ்சு வச்சிருக்கான், நான் அவனோட இருக்க முக்கிய காரணம் இனி என் வீட்ல நான் என்ன சொன்னாலும் என்ன நம்ப மாட்டாங்க, உண்மைய அவன் வாயாலேயே சொல்லறவரை என் நலம்விரும்பிங்கனு யாரு போய் சொன்னாலும் என் வீட்ல அத காது குடுத்து கூட கேட்க மாட்டாங்க"

"அப்படினா, கண்ணன் சொன்னா மட்டும் அவங்க எப்படிடி நம்புவாங்க, உனக்காக அவர் பொய் சொல்றாருனு நினைச்சிட்டா?"

"நினைக்கலாம், ஆனா எதனால திடிர்னு என் கழுத்துல தாலிய கட்டினான்னு அவன் வாயாலயே சொல்ல வைக்கறது தான் என்னோட திட்டம், அப்படி அவன் சொன்ன என்மேல தப்பில்லைனு அம்மா புரிஞ்சிக்கிட்டாங்கனா அப்புறம் எல்லாமே எனக்கு சாதகமா மாறிடும்"

"ஆனா கண்ணன்கிட்ட இருந்து எப்படி அந்த உண்மையை வாங்கறது?"

"அது தாண்டி எனக்கும் புரியல"

"நீ நைசா பேசி கேட்டு பாக்கலாம்ல"

"ஆனா அது இனி முடியாதே"

"என்னடி சொல்ற?"

"நான் கண்ணனுக்கு ஆப்போசிட்டா நடந்துக்கறேன்றது அவருக்கும் தெரியும், சொல்லப்போனா நான் சேலஞ் பண்ணிருக்கேன், உண்மைய எல்லார் முன்னாடியும் சொல்ல வைக்கறேன்னு"

"போடி, போடி, நமக்கிருக்கற ஒரே வழியையும் நல் லா கெடுத்து வச்சிருக்க, இப்போ அடுத்து என்ன பண்றது"

அதற்குள் கதவை தட்டும் சத்தம் கேட்கவும் அப்போதைக்கு தங்களின் யோசனையை தள்ளி வைத்துவிட்டு கதவை திறந்தாள் ராதி.......

"உள்ள வரலாமா?"

"வாங்கண்ணி, என்ன இப்படி பெர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்கீங்க"

"பிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ"

"அப்படியெல்லாம் இல்ல அண்ணி, என்ன விஷயம், எதோ சொல்ல வந்த மாதிரி இருக்கே"

"என்ன ராதி மறந்திட்டியா, இன்னைக்கு கல்யாண புடவை எடுக்கணும், நேத்தே சொன்னேனே, உன் பிரண்ட்ஸ் வந்ததுல எல்லாத்தையும் மறந்திட்ட போல, சரிம்மா, சீக்கிரம் கிளம்பி ரெடியா இரு, இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் புடவை, நகை எடுக்க போறோம்"

"அண்ணி, என்ன உங்க வீட்டு பொண்ண மட்டும் தான் கூட்டிட்டு போவீங்களா, நாங்கல்லாம் வர கூடாதா?"

"என்ன இப்படி சொல்லிட்டீங்க, ராதிக்கு பிரண்ட்னா நீங்களும் இந்த வீட்டு பொண்ணுங்க தான், எல்லாருமே கிளம்புங்க, இன்னைக்கு கடைக்கு போய் ஒரு கலக்கு கலக்குவோம்"
"சூப்பர் அண்ணி, நீங்க ரொம்ப ஜாலியா பேசறீங்க"

"நானும் யூத் தாம்மா, சொல்லப்போனா உங்க வயசு விட ரெண்டு வயசு தான் எனக்கு அதிகம் , என்ன ராதி சரி தான"

"அண்ணி, யாரு இல்லனு சொன்னது, நீங்க என்ன சொன்னாலும் நான் ஆமா சாமி தான் போட போறேன், அப்புறம் என்ன கேள்வி"

"உன் பிரண்ட்ஸ் வந்ததும் நீயும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டியே, சரி ராதி சீக்கிரம் கிளம்புங்க, அப்புறம் கண்ணன் தம்பி கோவிச்சிக்க போறாரு"

"என்ன கண்ணனும் வராரா?"

"பின்ன, அவருக்கும் தான கல்யாண டிரஸ் எடுக்கணும், அதுமட்டும் இல்லை, உன்னோட கல்யாண புடவைய கூட கண்ணனே செலக்ட் பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல ...அந்த அளவுக்கு ரெடி ஆகிட்டு இருக்காங்க மாப்பிள்ளை சைடு, அதனாலா நாமளும் நம்ம கெத்த காட்டனும்ல, சரி சரி எனக்கு வேலை இருக்கு, சீக்கிரம் ரெடி ஆகுங்க" சொல்லிவிட்டு போனவளை யோசனையோடு பார்த்தாள் ராதி....

"என்ன ராதி யோசிக்கற?"

"இல்லடி கடைல வச்சே அந்த கண்ணனுக்கு கொஞ்சம் பாடம் கத்துக்குடுக்க வேண்டியது இருக்கு, எனக்கு சப்போர்ட்க்கு நீங்க வந்துட்டீங்கல்ல, இனி அவனுக்கு இருக்கு"

கைமுஷ்டியை இறுக காட்டிவிட்டு சொன்னவள் மூளைக்குள் அவனை பழிவாங்கும் திட்டத்திற்காக யோசனை ஆரம்பித்தது.......

எழுதியவர் : ராணி கோவிந்த (7-Apr-17, 6:05 pm)
பார்வை : 465

மேலே