நவகிரகங்களும் நமது அறிவியலும் 1

நமது கோயில்களில் உள்ள நவகிரகங்களுக்கும் . அதனை சார்ந்த வழிபாடுகளுக்கும் . அதனை அடிப்படையாக கொண்ட ஜோதிடத்திற்கும்.. அடிப்படை அறிவியல் என்ன என்பதில் நமக்கு ஒரு வாதம் உள்ளது.

நல்ல ஜோதிட நிபூணர்களிடம் அதை பற்றி கேட்டால் அவர்கள் பதில் இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்பர். என்னை பொருத்தவரையில் அனைத்திலும் அறிவியலின் அணுக்கூறாவது இருந்தாகவேண்டும்.

ஒன்றில் ஒன்றாக என் முன்னவரின் அறிவியல் சாரத்தை பிடித்தேறி சிகரத்தில் அமரதோன்றி தேடும் தேடலிது..

நவகிரகங்கள் என்னெ்ன?

சூரியன்
குரு
செவ்வாய்
புதன்
வியாழன்
சந்திரன்
சனி
இராகு
கேது.

இதற்காக குணங்களும் வழிபாடுகளும் மாறும். முதலில் ஏன் இவைகள் மட்டும் என தெரிந்துகொள்ள வேண்டும்.

காஸ்மிக் கதிர்கள் ஒவ்வொரு பொருளிலும் வெளிபடும் அல்லது ஈர்க்கபடும். காஸ்மிக் கதிர்கள் பற்றி சொல்லவேண்டுமானால். சுழற்சியினால் ஏற்படும் இழுவிசை தேய்வு (சென்ட்ரிபூகல் போர்ஸ்) காரணமாக சில அதிர்வுகள் ஏற்படுகின்றன. அதன்படி வெளிபடும் கதிர்கள் ஈர்ப்புவிசை நோக்கி அலைகளாகவோ. அல்லது நேர் ஔி பாதையாகவோ பயணிக்கிறது. ரொம்ப குழப்புறேனோ.?

சரி இப்படி சொல்லலாம். ஒரு இரும்பு சக்கரத்தை சுற்றவிட்டு அதன் எதிர் தியைில் ஒரு காந்தம் வைத்து(அசையாதபடி) நடுவில் உள்ள இடைவெளியில் இரண்டு காப்பர் வயர் நடுவில் காற்றில் விட்டுவிட்டு அதன் மறுமுனையில் உங்கள் சார்ஐரை பொருத்தி மொபைலில் கனெக்ட் செய்யுங்கள். சக்கரத்தின் சுழற்சி வேகத்தை பொருத்து. காந்தத்தின் எடை அளவு பொருத்து . இடைவெளியை பொருத்து அதிக அல்லது குறைந்த மின்சாரம் கிடைக்கும்.

இப்போது சொல்லுங்கள். காந்தம் சும்மா இருக்கு. சக்கரம் தனியா சுத்துது. நடுவில ஒன்னுமில்ல . எப்படி மின்சாரம் வருகிறது. அதை போல் பெரிய அளவில் நடைபெறும் விசயம் தான் காஸ்மிக் கதிர்கள். இனி நமக்கு தெரியவேண்டியது என்ன?

வாண்வெளியில் எத்தனையோ லட்சம் கோடி நட்சத்திரங்கள் விண்கற்கள் கிரகங்கள் உள்ளபோது. ஏன் 9 மட்டும் அதிலும் சந்திரன் கிரகமல்ல. இராகு கேது. எதுவென்று கண்டவரில்லை. மேலும் சூரியன் கிரகமா? தெரியவில்லை..

ஆக 5 கிரகங்கள். ஒரு துணைக்கோள். சூரிய நட்சத்திரம். மீத இரண்டு என்னனு தெரியல. ஏன் நாம் வாழும் பூமியே இல்லையே. இங்குதான் தமிழனின் அறிவை புரிந்துகொள்ள வேண்டும்.

காரணமின்றி செய்யவில்லை தமிழன். காஸ்மிக் கதிர்கள் வெளியேறும் என்பதை அறிவோம். பூமியின் கதிர்கள் பூமியைவிட்டு வெளியே சென்றுவிடுகின்றன. ஆகையால் பூமியின் கதிர்களால் பாதிப்பில்லை. ஆகவே பூமியை அங்கே சேர்க்கவில்லை..

சந்திரன் துணைகோளாயிற்றே அதேன்.? அப்படிபார்த்தால் வியாழனுக்கு 23 நிலவுகளாயிற்றே அதையும் சேர்க்க வேண்டுமே?. இதுவும் காஸ்மிக் கதிர் தன்மை அடிபடையில் அமைந்ததே. சுழலும் பொருள் ஈர்க்கும் பொருளின் திசையில் தான் காஸ்மிக் கதிர்களை வெளிபடுத்தும். ஆக சந்திரன் சுழல்வது பூமியை . சந்திரனை ஈர்ப்பது பூமி ஆகையால் சந்திரனின் காஸ்மிக் கதிர்கள் பூமியை அடையும் அதனால் சந்திரன் சேர்க்கபட்டது..

சூரியன் ஏன்? என்றால். அத்தனை கிரகங்களும் சுழல்வது சூரியனை . அத்தனை கிரகங்களும் சூரியனால் ஈர்க்கபடுகிற அதே வேளையில் மற்ற கிரகங்கள் சூரியனை எதிர்விசையில் ஈர்ப்பதால் சூரியனின் காஸ்மிக் கதிர்கள். புற ஊதா கதிர்கள் என பல்வேறு கதிர்கள் மற்ற கிரகங்களுக்கு பயணிக்கும் போது இடையில் பூமி மாட்டி கொள்வதால் பூமியை அதிக அளவில் சேரும்.

அதே போல் மற்ற கிரகங்களுக்கும் சூரியனுக்கும் இடையிலான காஸ்மிக் பயணத்தில் பூமி குறுக்கிடுவதால் மற்ற கிரகங்களின் காஸ்மிக் கதிர் பாதிப்பும் பூமியை சேரும். அதில் புதன் வியாழன் சனி மட்டுமே நேரடி தொடர்பில் வருகிறது.

செவ்வாய் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் உள்ள கிரகம். ஸ்காட்டரிங் எனும் விதிப்படி அதன் தாக்கம் பூமிக்கு உண்டு.

இனி இராகு கேது என்பதை பற்றி:

இராகு கேது என்பது பூமிக்கு உரியதே . பூமிகோளத்தின் மையவிட்டத்தில் எதிரெதிர் புறத்தில் அமைந்தது இராகுவும் கேதுவும். தெளிவாக சொல்ல போனால். பூமியின் மைய ரேகையான பூமத்திய ரேகையில் ஒரு நீண்ட மலைப்பாம்பு படுத்திருப்பதை போல . இருபுறமும் நீண்டு இருக்கும். அதன் அறிவியல் என்ன தெரியுமா.

காஸ்மிக் கதிர்களின் குவிவு இங்கு நிகழ்கிறது அதில் பூமியின் காஸ்மிக் கதிர்களின் உராய்வு ஏற்பட்டு தெறிக்கும் விசையில் சீற்றமோ . தன்மையோ ஏற்படுகிறது.

குரு என்பது பாயும் பாதை அவ்வளவே.

தமிழனின் சிறப்பே தனியல்லவா... உண்மைதானே..

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (7-Apr-17, 8:04 pm)
பார்வை : 704

சிறந்த கட்டுரைகள்

மேலே